20-25 நாட்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தராங்க.. நெக்ரா என்னை இப்படித்தான் தயார் பண்ணினார் – தமிழகத்தின் சாய் கிஷோர் பேட்டி

0
510
Kishore

இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் காட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 56 ரன்கள் எடுத்த போதும், மேற்கொண்டு 14 ஓவர்கள் விளையாடிய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 84 ரன்கள் மட்டுமே சேர்த்து, மொத்தம் 20 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த சரிவுக்கு சாய் கிஷோர் பந்துவீச்சு மிகவும் முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், அசுத்தோஸ் சர்மா மற்றும் ஹர்பரித் பிரார் என முக்கிய விக்கெட்டுகளை தடாலடியாக வீழ்த்தினார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியால் அருகில் இருந்து மீளவே முடியவில்லை.

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடைசி கட்டத்தில் ஆட்டம் இழக்காமல் ராகுல் திவாட்டியா 7 பவுண்டரிகளுடன் 18 பந்தில் 36 ரன்கள் எடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் 19.1 ஓவரில் வெற்றி பெற வைத்தார். ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்ததற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி கணக்கை நேர் செய்தது.

இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் மட்டும் விட்டுத்தந்து முக்கிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பேசும் பொழுது “20, 25 நாட்களுக்குப் பிறகு எனது அணிக்காக நான் விளையாடுகிறேன். இதன் காரணமாகவே நான் எனது 120 சதவீத பங்களிப்பை செய்ய நினைக்கிறேன். இதனால் களத்திற்கு சென்று ஆட்டத்தை ரசித்து விளையாடி முழுவதையும் கொடுக்க நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 18.2 ஓவர்.. மூன்றாம் கட்ட நியூசி அணியிடம் சொந்த நாட்டில் தோற்ற பாகிஸ்தான்.. சாப்மேன் காட்டடி பேட்டிங்

எந்த நிலை வந்தாலும் அச்சமின்றி விளையாடலாம் என்கின்ற சூழ்நிலையை அணிக்குள் நெக்ரா ஏற்படுத்தியிருக்கிறார். என்னை ஆட்டத்தை ரசிக்கச் சொல்லி சுதந்திரமாக இருப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறார். நான் உள்ளுணர்வின் அடிப்படையில் விக்கெட்டுகள் எடுத்தேன். இங்கு வேகத்தை மாற்றுவதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று உணர்ந்து செயல்பட்டேன். ராகுல் திவாட்டியா மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்தார். ரஷீத் மற்றும் நூர் கூட்டணி சிறப்பாக பந்து வீசினார்கள்” என்று கூறியிருக்கிறார்.