இந்திய அணிக்கு.. இந்த இங்கிலாந்து வீரர் மாதிரி ஒரே ஒருத்தர் இருந்தா.. பிரச்சனையே வராது – புஜாரா கருத்து

0
103
Pujara

இந்திய டெஸ்ட் அணிக்கு இங்கிலாந்து அணிக்கு விளையாடும் ஒரு குறிப்பிட்ட வீரர் போல ஒருவர் தேவை என இந்திய அணி வீரர் புஜாரா கிரிக்கெட் வர்ணனையின் போது தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் இணைந்து ஹர்ஷா போக்லே மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி தற்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்திய அணி 371 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணிக்கு கொடுத்திருக்கிறது. அந்த அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் இருக்க கடைசி நாளில் வெற்றிக்கு 350 ரன்கள் தேவைப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணிக்கான பிரச்சனை

இந்திய டெஸ்ட் அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடுகின்ற பொழுது அவர்களுக்கு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைக்கு ரவிந்திர ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் என இரண்டு ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். மேலும் தேவைப்பட்டால் அக்சர் படேல் விளையாடுவார். எனவே இந்திய மண்ணில் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு பிரச்சனையே கிடையாது.

அதே சமயத்தில் வெளிநாடுகள் சென்று விளையாடும் பொழுது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. கபில்தேவ் மற்றும் ஹர்திக் பாண்டியா போல பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தாக்கத்தை செலுத்தக்கூடிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாததால், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் கடைசி கட்டத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.

- Advertisement -

இவர் போல ஒருவர் வேண்டும்

இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிய புஜாரா “இங்கிலாந்து அணியின் பென்ஸ் ஸ்டோக்ஸ் மாதிரி பவுலிங் பேட்டிங் பில்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு வீரர் இந்திய அணிக்குக் கட்டாயம் தேவை” என்று கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய ஹர்ஷா போக்லே ” இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும் பொழுது இதற்கு ரவிந்திர ஜடேஜா போல ஒருவரை வைத்திருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் தான் இப்படியான வீரர் இல்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஒரு விஷயத்தை நினைச்சா வலிக்குது.. கடந்த சில வருஷமா எனக்கானத மறந்தே போயிட்டேன் – கேஎல் ராகுல் வருத்தம்

இதற்கு பதில் அளித்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்த இடத்திற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நிதீஷ் குமார் ரெட்டியை பார்க்க முடியும். அவர் நல்ல முறையில் பேட்டிங் செய்கிறார். ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் சதமும் அடித்திருக்கிறார் என்பது முக்கியமான விஷயம். அவரால் சிறந்த முறையில் பந்தும் வீச முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -