இந்திய டெஸ்ட் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக இரண்டு தொடர்களாக விளையாடி வரும் கேஎல்.ராகுல் கடந்த சில வருடங்களாக தனக்கு எது வசதியானது என்பதையே மறந்து விட்டதாகவும் ஆனால் தான் இதை விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக முக்கியமான நேரத்தில் கேஎல்.ராகுல் சதம் அடித்து 137 ரன்கள் எடுத்தார். கண்டிஷன் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிய பொழுது அவர் காட்டிய பேட்டிங் தொழில்நுட்பம் இந்திய முகாமுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வருடமா மறந்து விட்டேன்
இது குறித்து கேஎல்.ராகுல் பேசும் பொழுது ” கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய பேட்டிங் பொசிஷன் என்ன? நான் என்ன செய்வதில் வசதியாக இருக்கிறேன்? என்பதை எல்லாம் மறந்து விட்டேன். எனக்கு பேட்டிங் பொசிஷன் மற்றும் பொறுப்புகள் என பல மாதிரியாக கொடுக்கப்பட்டது. இது என்னை மகிழ்ச்சி அடைய வைப்பது உடன் விளையாட்டை உற்சாகமாக விளையாடவும் வைக்கிறது. இந்த சவாலுக்காக என்னை கடினமாக உழைக்க வைக்கிறது. எனவே இதை செய்வதை நான் ரசித்தேன்”
“மேலும் கடந்த இரண்டு தொடர்களில் என்னுடைய பொசிஷன் தொடக்க ஆட்டக்காரராக இருந்தது. நான் இதை செய்வதிலும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய கிரிக்கெட் ஆரம்ப காலகட்டங்களில் நான் தொடக்க ஆட்டக்காரராகவே விளையாடினேன். மீண்டும் அணிக்காக அதே இடத்தில் வந்து விளையாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
இதை நினைத்தால் வலிக்கிறது
“என்னுடைய டெஸ்ட் ரன் ஆவரேஜை பார்க்கும் பொழுது உண்மையில் எனக்கு வலிக்கிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் நான் இந்த மாதிரியான எண்களை பார்ப்பது கிடையாது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் விளையாட்டை ரசித்து அணிக்காக விளையாடவே விரும்புகிறேன். நான் முன்பெல்லாம் ஒரு நல்ல தொடக்கத்தை பெறுவேன் ஆனால் அதை பெரியதாக மாற்ற மாட்டேன். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இப்படி நடந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். நான் எங்களை பார்க்காமல் விளையாட்டை ரசித்து விளையாடுகிறேன்”
இதையும் படிங்க : 350 ஸ்கோரை நாங்க சும்மா அடிப்போம்.. எங்க பிளான் இதுதான் – இங்கிலாந்து வீரர் ஜோஸ் டங் சவால் பேச்சு
“நான் உயர்வாக கருதியை சீனர்களிடமிருந்து இந்த விஷயத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன். இதை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஒட்டு மொத்த கிரிக்கெட்டிலும் கொண்டு வந்து நான் விளையாடுகிறேன். நீங்கள் சிறப்பாக தயாராவதும், அதைக் கொண்டு வந்து சிறப்பாக விளையாடுவதும்தான் உங்களுடைய கையில் இருக்கிறது. ஆனால் இங்கு எப்பொழுதும் எதற்கும் உத்தரவாதம் கிடையாது. உங்களுக்கு ஒரு சிறந்த நாள் இருப்பதைப் போல மோசமான நாளும் இருக்கும். கிடைக்கும் வாய்ப்புக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் அவ்வளவுதான்” என்று கூறி இருக்கிறார்.






