இந்திய கிரிக்கெட்டில் தன் மீது தவறான லேபிள் ஒட்டப்பட்டு விட்டதாகவும், அதே சமயத்தில் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கு தான் கஷ்டப்பட்டு உழைப்பு வருவதாகவும் புஜாரா தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றுவிட்ட போதும் புஜாரா இன்னும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறவில்லை. எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என அவர் உறுதியாக நம்பி வருகிறார்.
மேலும் கடந்த முறை இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தபோது முன்னணி வீரர்கள் விராட் கோலி முதற்கொண்டு சில இல்லாதபோதும் புஜாரா மற்றும் ரகானேவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தற்போது ரகானே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் புஜாராவுக்கு அப்படியான வாய்ப்புகள் எதுவும் கிடைப்பதில்லை.
இதுகுறித்து புஜாரா பேசும் பொழுது “நான் எப்பொழுதுமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை ரசித்திருக்கிறேன். ஆனால் உங்களை ஒரு டெஸ்ட் வீரராக மட்டுமே குறிப்பிடப்பட்டால், மற்ற வடிவங்களில் உங்களுக்கு விளையாடும் திறமை இருக்கும் பொழுது அது சரியான லேபிளாக இருக்காது. இப்படியான லேபிள் ஒட்டப்படுவது நீங்கள் தூய்மையான கிரிக்கெட் வடிவத்தில் விளையாட தகுதியாக இருக்கிறீர்கள் என மக்கள் ஒப்புக் கொள்வதாகும்”
“அதே நேரத்தில் இது உங்களை ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதாகவும் எதிர்மறையானதாகவும் மாறிவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. ஏனென்றால் உங்களை ஒரு டெஸ்ட் வீரர் என்று குறிப்பிடப்பட்டவுடன் உங்களுக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது”
இதையும் படிங்க : இந்தியா டெஸ்ட்.. சிஎஸ்கே இந்திய வீரர் வாய்ப்பை பறிக்கும்.. இன்னொரு சிஎஸ்கே வீரர்.. பரமபத நிலை.. முழு விபரங்கள்
“நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் வரை நான் என்ன உயரத்தில் இருக்கிறேன் என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் கிடையாது. எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும். என்னுடைய ரிதம், பிட்னஸ் மற்றும் விளையாட்டு மேல் இருக்கின்ற தொடர்பை பராமரிப்பதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே உள்நாட்டு மட்டத்திலோ அல்லது இந்திய அணிகளோ வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதற்கு நான் தயாராக இருப்பேன் ” என்று கூறியிருக்கிறார்.