இந்தியா டெஸ்ட்.. சிஎஸ்கே இந்திய வீரர் வாய்ப்பை பறிக்கும்.. இன்னொரு சிஎஸ்கே வீரர்.. பரமபத நிலை.. முழு விபரங்கள்

0
151
Kamboj

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம்பெறுவதில் நிறைய வீரர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஒரு சிஎஸ்கே வீரர் இன்னொரு சிஎஸ்கே வீரர்களின் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குவதற்கு முன்னால், இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அன்சூல் காம்போஜ் சிக்கனம்

தற்போது இந்திய ஏ அணியில் சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜ் இடம்பெற்று இரண்டு போட்டிகளாக விளையாடி வருகிறார். இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் ஒரு ஓவருக்கு மூன்று ரன்கள் வீதம் மிகவும் சிக்கனமாக கொடுத்து வருகிறார்.

அன்சூல் காம்போஜ் விக்கெட் கைப்பற்றுவதில் கொஞ்சம் பின் தங்கி இருந்தாலும். ஒரு பக்கத்தில் இருந்து மிகவும் டைட்டாக சிக்கனமாக பந்து வீசக்கூடியவராக இருக்கிறார். இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் யாராவது காயம் அடைந்தால் இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

மற்றொரு சிஎஸ்கே வீரர் அசத்தல்

இந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிஎஸ்கே வீரரான வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் இன்று பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அணியின் திடீர் சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்.

இதையும் படிங்க : புது கேஎல் ராகுலை இங்கிலாந்தில் நீங்க பார்ப்பீங்க..பல சவால்களை பார்த்தவர்.. சிறுவயது பயிற்சியாளர் கருத்து

இவரைப் பொறுத்தவரையில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து வீசுவார். மேலும் இவரால் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும். ஆனால் இவரிடம் லைன், லென்த் கட்டுப்பாடு குறைவாக இருக்கும். இதன் காரணமாகவே இவர் பின்தங்கி இருந்தார். ஆனால் தற்போது இவரிடம் இந்த கட்டுப்பாடும் அதிகரித்திருக்கிறது. மேலும் நல்ல வேகமும், ஸ்விங் செய்யும் திறமையும் தற்போது விக்கெட் எடுத்திருப்பதும், இந்திய டெஸ்ட் அணியில் இவருக்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது. இப்பொழுது அன்சூல் காம்போஜ் பின் தங்க ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -