ஓபனா சொல்றன்.. சர்ப்ராஸ் கானை இதனாலதான் செலக்ட் பண்ணல.. அவங்க இப்படி நினைக்கிறாங்க – புஜாரா விளக்கம்

0
330
Pujara

இந்திய டெஸ்ட் அணியில் சர்ப்ராஸ் கானை தேர்வு செய்யாத காரணம் குறித்து இந்திய வீரர் புஜாரா வெளிப்படையான காரணங்களை கூறியிருக்கிறார். மேலும் பேட்டிங் ஆர்டர் எப்படி அமைய வேண்டும்? என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சர்ப்ராஸ் கான் கழட்டிவிடப்பட்டார். அவர் தொடர்ந்து பங்களாதேஷ் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சர்பராஸ் கான் சேர்க்கப்படாத காரணம்

இதுகுறித்து புஜாரா பேசும் பொழுது “சர்ப்ராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் இல்லாததற்கான காரணம், அவர் இந்தியா மற்றும் ஆசிய சூழ்நிலையில் வெற்றிகரமாக இருக்க முடியும் என்றும், ஆனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக இருக்க முடியாது என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நினைப்பதால்தான்”

“கடந்த காலங்களில் அவருக்கு சில உடல் தகுதி பிரச்சனைகள் இருந்தன. தற்போது அவரது உடல் தகுதி எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அந்த விஷயத்தில் வேலை செய்து வருகிறார் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் அவர் தேர்வு செய்யப்பட விட்டாலும் கூட உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”

- Advertisement -

விராட் கோலி இடம் யாருக்கு?

“விராட் கோலி இடத்தில் கில் பேட்டிங் செய்வாரா அல்லது தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருப்பாரா என்று நமக்கு தெரியாது. ஒருவேளை அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்தால் மூன்றாவது இடம் காலியாக இருக்கும். அந்த இடத்திற்கு அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கருண் நாயர் சரியாக இருப்பார்கள். அதே சமயத்தில் கில் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து இருக்க, உள்நாட்டு கிரிக்கெட்டின் சிறப்பாக இருந்த கருண் நாயர் நான்காவது இடத்தில் இருப்பாரா? என்பதை பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க : தோனி தேவையா?.. இந்த முடிவ இனி எடுக்க வேண்டியது இவங்கதான்.. நிலைமை மோசமாயிடுச்சு – அனில் கும்ப்ளே பேச்சு

“உள்நாட்டு கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் கருண் நாயர் பேட்டிங் செய்யாதவர் என்பதால் அந்த இடம் அவருக்கு பொருத்தமானதாக இருக்காது. அவரால் அதை செய்ய முடியாது என்று நான் சொல்லவில்லை. ஏற்கனவே அவருக்கு பழக்கப்பட்ட நான்காவது இடம் சரியானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -