ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோனி விளையாட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியிருக்கிறார்.
இன்று சிஎஸ்கே அணி குஜராத் அணிக்கு எதிராக நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் விளையாடுகிறது. அனேகமாக இது தோனிக்கு கடைசி போட்டியாக கூட அமையலாம் என வெளியில் பேசப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் தோனி எதையும் சொல்லவில்லை.
தோனியின் மோசமான தடுமாற்றம்
தோனியால் பத்து ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது. குறைந்தது அவரால் கடைசி மூன்று ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடிகிறது. மேலும் அவரால் சரளமாக சுழல் பந்துவீச்சுக்கு எதிராக விளையாட முடியவில்லை. இதன் காரணமாக எல்லா அணிகளும் அவருக்காக சுழல் பந்து வீச்சாளர்களை பத்திரப்படுத்தி வைக்கிறார்கள்.
இதன் காரணமாக இறுதிக் கட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு தேவையான ரன்கள் வருவதில் பெரிய சிக்கல் உண்டாகிறது. வெளிப்படையாக தோனி பேட்டிங் செய்யும்பொழுது தடுமாறுவதை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே சிஎஸ்கே ரசிகர்களே அவர் ஓய்வு பெற்றால் நல்லதுதான் என்று பேசும் நிலை வந்திருக்கிறது. தற்போது இது குறித்து அனில் கும்ப்ளே கூறியிருக்கிறார்.
இவர்கள் முடிவெடுக்க வேண்டும்
இதுகுறித்து அனில் கும்ப்ளே பேசும் பொழுது “சில சமயங்களில் அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டிய காலங்கள் வரும். மேலும் இது தோனியும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. அதே சமயத்தில் வயதானவர்கள் வந்து வெற்றி பெறுவதற்கான ஒரு கிரிக்கெட் வடிவமாக இது இருக்கிறது. இதுவே டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியாக இருந்தால் இந்த வயதில் வந்து விளையாடுவது மிகவும் கடினமானதாக மாறிவிடும்”
இதையும் படிங்க : 3 வடிவத்தில இந்த பையன் கில்லி.. செலக்ட் பண்ணி இருந்தா இங்கிலாந்து அணியை அடக்கி இருக்கலாம் – சேவாக் விமர்சனம்
“ஆனால் ஒரு கட்டத்தில் சிஎஸ்கேவின் எதிர்காலத்தை எவ்வாறு பார்க்க நினைக்கிறார்கள் என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டும். அதே சமயத்தில் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாட விட்டாலும் கூட, சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






