நூறாவது போட்டியில் டக் அவுட் ஆன புஜாரா”!! இந்தப் பட்டியலில் இருக்கும் வீரர்கள் யார்?யார்?

0
258

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது . முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது . இன்று காலை தொடர்ந்த ஆடிய இந்தியா 46 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது . 17 ரன்களை எடுத்து இருந்த கே எல் ராகுல் லியான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார் .

- Advertisement -

இவரைத் தொடர்ந்து ஆட வந்த புஜாரா இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தியா அணிக்காக நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13 வது வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது . நூறாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பாரா புஜாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் லியான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . முதல் டெஸ்ட் போட்டியிலும் ஏழு ரன்களில் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இறுதியாக பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த புஜாரா அதன்பிறகு பெரிய ஸ்கோர் எடுக்காமல் தடுமாறி வருகிறார் .

இந்தப் போட்டியில் ரன்கள் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தத்தின் மூலம் மோசமான ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார் புஜாரா . நூறாவது டெஸ்ட் போட்டியில் ரன்கள் எடுக்காமல் ஆட்டம் இழந்த வீரர்களின் சாதனை பட்டியலில் தன்னுடைய பெயரையும் இணைத்து இருக்கிறார் அவர் . இவருக்கு முன்பாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆறு வீரர்கள் தங்களது நூறாவது டெஸ்ட் போட்டியில் ரண்கள் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

அந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் ஸ்டீபன் பிளம்பிங் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் தங்களது நூறாவது டெஸ்ட் போட்டியில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்த வீரர்கள் அவர் . இந்தப் பட்டியலில் தன்னையும் இணைத்து இருக்கிறார் புஜாரா .

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து கடுமையாக போராடி வருகிறது . தேநீர் இடைவேளைக்கு பிறகான ஆட்டத்தில் 22 ரன்களுக்கு ஏழை விக்கெட்டுகளை இழந்துள்ள இந்தியா 61 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது . ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்கள்டனும் அக்சர் பட்டேல் 34 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் .