5வது டெஸ்ட்.. 112 வருடம்.. இந்தியாவின் கையில் அரிய சாதனை.. ரோகித்தின் இளம் படை சாதிக்குமா

0
306
ICT

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இங்கிலாந்து அணியின் இந்த டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கின்றன. இதில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இளம் இந்திய அணி சிறப்பான முறையில் மீண்டு வந்து, விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி என தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று, தொடரைக் கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் மார்ச் 7ஆம் தேதி துவங்கி மார்ச் 11ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவுக்கும் நூறாவது டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி அமைவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியை வென்று தொடரை நான்குக்கு ஒன்று என கைப்பற்றினால், 118 வருடங்களுக்குப் பிறகு உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனையை ஒன்றை படைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்று, அதற்கு அடுத்த நான்கு போட்டிகளையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆசஸ் தொடரில் வென்று இருக்கிறது. கடைசியாக இப்படியான சம்பவம் நடைபெற்றது இந்தத் தொடரில்தான். மொத்தமாக இப்படியான வரலாறு மூன்று முறை மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் நடைபெற்ற இருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024.. சிஎஸ்கேவுக்கு கேப்டன் தோனி இல்லையா?.. அவரே வெளியிட்ட பதிவால் பரபரப்பு

இந்திய அணி தரம்சாலா மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்று தொடரை நான்குக்கு ஒன்று என கைப்பற்றினால், 112 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த அரிய சம்பவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது!