“7 போட்டி 19 ரன்.. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு வீரர் உண்டா?” – சல்மான் பட் விமர்சனம்

0
550
Butt

தற்பொழுது பாகிஸ்தான் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மேலும் கேப்டனாக இருந்த பாபர் அசாம் விலகிக் கொண்டதின் காரணமாக, தற்பொழுது டி20 பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் ஷாகின் அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருக்கிறது. இரண்டு போட்டியிலும் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 10 ஓவர்கள் தாண்டும் பொழுது, இலக்கை எட்டக்கூடிய அளவில் இருந்து, பின்பு விக்கெட்டை கொடுத்து தோற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் முகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக பிளேயிங் லெவனில் இருந்தும், 25 வயதான வலதுகை விக்கெட் பேட்ஸ்மேன் அசாம் கான் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கிறார். அவர் இரண்டு போட்டிகளிலும் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல நட்சத்திர விக்கெட் கீப்பர் மொயின் கான் அவரது மகன் ஆகும். பிரான்சிசைஸ் டி20 லீக்குகளில் அதிரடியாக விளையாடும் இவரால் பாகிஸ்தான் தேசிய அணிக்கு வரும்பொழுது சரியாக விளையாட முடிவதில்லை. இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ஏழு சர்வதேச போட்டிகள் விளையாடி 19 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் இவர் இன்சமாம் உல் ஹக் போல உடல் பருமன் ஆனவர். இவர் விக்கெட் கீப்பிங் மிக நன்றாக டைப் அடித்து பந்தை பிடிக்கவும் செய்கிறார். ஆனாலும் கூட இவர் உடல் பருமன் குறித்து மக்கள் நிறைய கேள்விகள் எழுப்புகிறார்கள். மேலும் இவர் ரன் அடிக்காத காரணத்தினால் இவர் மீதான விமர்சனங்கள் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும் பொழுது ” அசாம் கான் 7 போட்டிகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இவருக்கு எப்படி அணியில் இடம் கிடைத்தது என்று மக்கள் கேட்கிறார்கள். ஏற்கனவே அவரது உடல் தகுதி குறித்தும் நிறைய பேச்சுகள் இருக்கிறது. தொடர்ந்து அவர் பேட்டிங்கில் செயல்படத் தவறினால் எவ்வளவு காலம் நீடிப்பார் என்று தெரியாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஏழு போட்டிகளில் 19 ரன்கள் எடுத்த வீரர்கள் யாராவது இருக்கிறார்களா? அவர் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் தொடர்ந்து பேட்டிங்கில் தோல்வி அடைந்தால் எதிர்காலத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்று நான் நினைக்கிறேன்.

அவர் உடல் பருமனாக இருப்பதால் சீக்கிரம் களைப்படைவதோ உடல் தகுதி இல்லாதவர் போலவோ தெரிவதில்லை. அவரால் டைவ் அடிக்கவும் முடிகிறது. ஆனால் அவர் பருமனான தோற்றத்தில் இருக்கிறார். கிரிக்கெட் விளையாடக் கூடியவர் இப்படி இருப்பது விவாதத்தை உருவாக்குகிறது. உடல் பருமன் அவரை தொந்தரவு செய்தாலும் செய்யாவிட்டாலும், ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக அவர் நன்றாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.