50-4.. என்னையவா ஒதுக்குன.. பாபர் அசாம் டீமை பைனலுக்கு வெளியே அனுப்பிய வீரர்

0
706
Babar

தற்பொழுது பாகிஸ்தானின் பிஎஸ்எல் டி20 லீக்கின் ஒன்பதாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் நேற்று பாபர் அசாமின் பெசாவர் சல்மி அணியும், சதாப் கானின் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியும் மோதிக்கொண்டன.

முதல் தகுதி சுற்று போட்டியில் பாபர் அசாமின் அணி முகமது ரிஸ்வானின் முல்தான் சுல்தான் அணியிடம் தோல்வி அடைந்து இரண்டாவது எலிமினேட்டருக்கு வந்தது. முதல் எலிமினேட்டர் போட்டியில் சதாப் கானின் அணி குவேட்டா கிளாடியேட்டர் அணியை வீழ்த்தி இரண்டாவது எலிமினேட்டர் சுற்றுக்கு வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற இஸ்லாமாபாத் யுனைடெட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெசாவர் சல்மி அணியின் துவக்க ஆட்டக்காரர் இளம் வீரர் சையும் அயூப் சிறப்பாக விளையாடி 44 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் மெதுவாக விளையாடி 22 பந்துகளில் 25 ரன்கள் மட்டும் எடுத்தார்.

இதற்கு அடுத்து அந்த அணிக்கு முகமது ஹாரிஸ் 25 பந்தில் 40 ரன், அமீர் ஜமால் ஒன்பது பந்தில் ஆட்டம் இழக்காமல் 17 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெசாவர் சல்மி அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணித்தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் நசிம் ஷா 4 ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு அலெக்ஸ் ஹேலஸ் 1, ஆகா சல்மான் 5, கேப்டன் சதாப் கான் 0, துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 34 ரன்கள் என 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் விக்கெட் விழுந்து அந்த அணி நெருக்கடிக்கு உள்ளானது.

- Advertisement -

ஆனால் இதற்கு அடுத்து வந்த அனுபவ வீரர் சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இமாத் வாசிம் ஆட்டம் இழக்காமல் 40 பந்தில் 50 ரன், ஹைதர் அலி ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 29 பந்தில் 52 ரன்கள் எடுக்க, இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பெசாவர் சல்மி அணியை 19 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இன்று இறுதிப்போட்டியில் முகமது ரிஸ்வானின் முல்தான் சுல்தான் அணி உடன் விளையாடுவதற்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க : ரோகித் ஹர்திக் ஈகோ பிரச்சனை.. மும்பை இந்தியன்ஸ் கட்டாயம் இதை செய்யும் – டேல் ஸ்டென் பேச்சு

இமாத் வாசிம் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் கேப்டனாக வந்த பிறகு இவரை இவரை திட்டமிட்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு இருந்தது. இவருடைய இடத்துக்கு முகமது நவாசை பாபர் அசாம் பயன்படுத்தினார். இதுகுறித்து அப்பொழுது பலர் குற்றம் சாட்டி பாபர் அசாமை பேசியிருக்கிறார்கள். தற்பொழுது பாபர் அசாம் ஒதுக்கிய வீரரே, அவரது அணியை இறுதி போட்டிக்கான வாய்ப்பிலிருந்து வெளியேற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.