ருதுராஜ் அற்புதமான ஒரு வேலையை செஞ்சார்.. என்னுடைய தனிப்பட்ட பிளான் இதுவாதான் இருந்தது – டேரில் மிட்சல் பேட்டி

0
2447
Mitchell

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணியை வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பில் தொடர்கிறது. இன்றைய போட்டிக் குறித்து சிஎஸ்கே வீரர் டேரில் மிட்சல் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் வென்றால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய மெதுவாக இருந்த காரணத்தினால், அந்த அணியால் 20 ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகளுக்கு 141 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய வந்த பொழுது அவர்களது திட்டம் தெளிவாகத் தெரிந்தது. ஒரு முனையில் கேப்டன் ஒரு ருதுராஜ் ரன் அழுத்தத்தை பற்றி எந்தவித கவலையும் இல்லாமல், தொடர்ந்து பொறுமையாக விளையாடுவதை திட்டமாக வைத்து விளையாடினார்.

இவருடன் இணைந்து விளையாடியவர்கள் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக விளையாடுவதற்கு முயற்சி செய்தார்கள். ஆடுகளம் மெதுவாக இருந்ததால் யாராவது ஒருவர் கடைசி வரை விளையாடுவதற்காக இப்படியான திட்டத்தை சிஎஸ்கே இன்று பேட்டிங்கில் கொண்டு வந்திருந்தது. இந்த திட்டத்தின் படி ருதுராஜ் கடைசி வரை நின்று 41 பந்தில் 42 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். டேரில் மிட்சல் இந்த போட்டியில் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். அவர் உள்ளே வந்ததும் அதிரடியாக விளையாடவே முயற்சி செய்தார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “மெதுவான விக்கெட்டை கடந்து வந்து விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நாங்கள் பவர் பிளேவில் மிகச் சிறப்பாக பந்து வீசி, அவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து, அவர்களை ரிஸ்க் எடுக்கச் சொன்னோம். நடுவில் ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்தஆடுகளத்தில் சரியான ஸ்கோர் எதுவென்று தெரியவில்லை. ஆனால் அவர்களை இந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தியது மகிழ்ச்சியை தருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஸ்டெம்பில் படாத பந்து.. ஆனாலும் ஜடேஜாவுக்கு ரன் அவுட் கொடுத்த அம்பயர்.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

நான் அதிரடியாக விளையாடுவது பார்ட்னர்ஷிப்பை பொறுத்து அமைகிறது. ஆடுகளம் மெதுவாக இருக்கிறது பந்து புதியதாக இருக்கிறது. எனவே அந்த நேரத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த காரணத்தினால் தான் நான் ரன்களுக்கு அதிரடியாகச் சென்றேன். மேலும் இந்த மைதானத்தில் விளையாடுவது சிறப்பானது. ஏனென்றால் இங்கு எங்களுக்கான ஆதரவு நிறைய இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.