INDvsENG.. 3வது டெஸ்ட்.. நாளை வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. முக்கிய மாற்றங்கள்

0
185
ICT

குஜராத் ராஜ்கோட் சௌராஷ்டிரா அசோசியேஷன் கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியை இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியை இந்தியாவும் வென்று தொடர் சமநிலையில் இருப்பதால், மூன்றாவது போட்டிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகின்ற பும்ராவுக்கு ஓய்வு தரப்படுமா? என்பதும் சுவாரசியமான கேள்வியாக இருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறிவிட்டார். கில் இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தது தன்னுடைய இடத்தை காப்பாற்றிக் கொண்டார்.

மேலும் கே எல் ராகுல் அணிக்கு திரும்பியிருக்கிறார். இவரையும் ரவீந்திர ஜடேஜாவையும் கடைசி நேரத்தில் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விளையாடும் அணியில் சேர்ப்பார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் கேஎல்.ராகுல் விளையாடுவதாக இருந்தால், ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ரஜத் பட்டிதார் விளையாடுவார். ஒருவேளை கேஎல்.ராகுல் விளையாடவில்லை என்றால், சர்பராஸ் கான் முதல்முறையாக அறிமுகமாகவும் வாய்ப்பை பெறுவார்.

இதே போல் கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது உறுதி செய்யப்படும். அவர் அணிக்குள் வந்தால் நிச்சயம் குல்தீப் யாதவ் வெளியேறுவார்.

அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட முகமது சிராஜ் மூன்றாவது போட்டிக்கு திரும்பியிருக்கிறார். எனவே முகேஷ் குமார் இடத்தில் இவர் விளையாடுவார். இந்த அளவில் மாற்றங்கள் இருக்க மட்டுமே வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் கே.எஸ். பரத்துக்கு விக்கெட் கீப்பராக இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.

இதையும் படிங்க : “உலக கோப்பையை இழந்தது இதனால்தான்.. இந்த தவறுகளை செஞ்சிட்டோம்” – இந்திய கேப்டன் பேட்டி

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கேஎல்.ராகுல், ரஜத் பட்டிதார், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், கேஎஸ்.பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா மற்றும் முகமது சிராஜ்.