“உலக கோப்பையை இழந்தது இதனால்தான்.. இந்த தவறுகளை செஞ்சிட்டோம்” – இந்திய கேப்டன் பேட்டி

0
314
Uday

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டு இருக்கிறது.

இன்றைய இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 253 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜாஸ் சிங் 52 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் ராஜ் லிம்பானி மூன்று விக்கெட்டுகளையும், நமன் திவாரி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே ரன் எடுப்பது மிகப்பெரிய சிரமமாக இருந்தது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய பேட்ஸ்மேன்களை மிகவும் சோதனைக்கு உள்ளாக்கினார்.

ஒரு பக்கம் ரன் இல்லாமலும் அதே சமயத்தில் விக்கெட்டும் விழ, அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு ரன் அழுத்தம் கூடிக் கொண்டே இருந்தது. இதனால் அதை சமாளிக்க முடியாமல் மற்றவர்களும் விக்கெட்டை பறி கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஆதர்ஸ் சிங் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 47 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 174 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது.

தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் உதய் சகரன் கூறும்பொழுது “நான் எங்கள் அணியின் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். தொடர் முழுவதும் நல்ல போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார்கள். இன்று நாங்கள் சில மோசமான ஷாட் விளையாடினோம். நாங்கள் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் நேரம் செலவிடவில்லை.

இதையும் படிங்க : SLvsAFG.. 28 ரன் 9 விக்கெட்கள்.. ஆப்கான் திடிர் சரிவு.. இலங்கை அணி பிரமாண்டமான வெற்றி

நாங்கள் இறுதிப் போட்டிக்கு தயாராக இருந்தும் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இந்த போட்டியில் இருந்தும், அணியின் ஊழியர்களிடமிருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து கற்றுக்கொண்டு சிறப்பாக இருக்க முயற்சிப்போம்” என்று கூறி இருக்கிறார்.