IND vs NZ பைனல்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அந்த மாற்றம் நடக்குமா.. நியூசி பிளான் உடையுமா?

0
169
ICT

நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளையுடன் முடிப்புக்கு வருகிறது. தற்போது இந்த தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன. ஏற்கனவே 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போது நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் திட்டம்

நியூசிலாந்து அணி ஏற்கனவே லீக் சுற்றில் இந்த மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய அனுபவத்தை கொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் கூட நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு வருவதற்கான திட்டத்தை தயாரிக்க உதவும் போட்டியாக அது அமைந்திருக்கிறது.

மிகக்குறிப்பாக வருண் சக்கரவர்த்திக்கு எதிராக நியூசிலாந்து சிறந்த திட்டத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாடும் திட்டத்தையும் அவர்கள் எடுத்து வரலாம். இந்த நிலையில் இந்திய அணியில் ஒரு கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டுமா? என்கின்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் மாற்றம்

தற்போது இந்திய அணியில் இடம்பெறும் 4 சுழல் பந்துவீச்சாளர்களில் வருண் சக்கரவர்த்தி இடம் உறுதி ஆகிறது. அக்சர் படேல் மற்றும் ஜடேஜா இருவரும் பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்பதால் கட்டாயம் இடம் பெறுவார்கள். எனவே குல்தீப் இடத்தில் ஹர்ஷித் ராணா விளையாட வேண்டும் என்றும், அவர் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவார் என்றும் பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்த மாற்றத்தை செய்ய மாட்டார்கள் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். எனவே பழைய பிளேயிங் லெவனுடன் செல்லவே விரும்புவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஐசிசி இந்தியாவுக்கு சாதகமா இருக்கா.? உண்மையை வெளிப்படையாக பேசும் இந்திய பேட்டிங் கோச்

கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி.

- Advertisement -