துபாயில் இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் நிலையில் இதன் இறுதிப்போட்டியில் நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் இந்திய அணியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து தகுந்த பதில்களை அளித்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி பைனல்
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்ததை அடுத்து, இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. ஒரே மைதானத்தில் இந்திய அணி தொடர்ந்து விளையாடுவதால் அந்த மைதானத்தின் சூழ்நிலை, ஆடுகளத்தின் தன்மை உள்ளிட்ட விஷயங்கள் இந்திய அணி நன்றாக அறிந்து கொள்வதால் மற்ற அணிகளை விட சாதகமான சூழல் இந்தியாவுக்கு இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
மேலும் ஐசிசியும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்மை அளிக்க கூடிய வகையில் செயல்பட்டதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முன்னாள் வீரர் சிதான்ஷூ கோடக் இந்த விமர்சனத்தை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். இந்திய அணி சிறப்பாக விளையாடுவதால் வெற்றி பெறுகிறது எனவும், எனவே இதில் இது போன்ற விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பது வகையில் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
எந்த அர்த்தமும் இல்லை
இது குறித்து அவர் கூறும் போது “இந்திய அணி துபாயில் விளையாடுவதால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது என்று புரியவில்லை. நாங்கள் ட்ரா வரை விளையாடும் இந்திய அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மக்கள் அதை ஒரு நன்மையாக கருதினால், இது குறித்து என்ன சொல்வது என்று புரியவில்லை. ஒரு ஆட்டத்தின் இறுதியில் நீங்கள் ஒவ்வொரு நாளும் விளையாடும் போது நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க:ஓபனாவே சொல்றேன்.. இந்திய அணிக்கு ரொம்ப கஷ்டம்.. அவர் பார்முக்கு வந்துட்டாரு.. பைனல் குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர்
நீங்கள் ஒருவேளை நன்றாக விளையாடவில்லை என்றால் இது குறித்து புகார் சொல்ல முடியாது. நீங்கள் நன்றாக விளையாடினால் அந்த ஆடுகளத்தின் நன்மை உங்களுக்கு கிடைக்கிறது என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால் நாங்கள் இங்கே பயிற்சி செய்கிறோம், அங்கே போட்டிகளை விளையாடுகிறோம். வெளிப்படையாகவே நாங்கள் வெவ்வேறு விக்கெட்டில் பயிற்சி செய்து விளையாடுகிறோம். துபாயில் இந்திய அணி விளையாடுகிறது என்பது தான் ஒரே விஷயம். அதனால் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக விஷயத்தை மாற்றி விட்டார்கள் என்று கூறுவது நியாயம் அல்ல” என்று பேசி இருக்கிறார்.






