இந்திய கிரிக்கெட்

ரிக்கி பாண்டிங் சார் எங்களுக்கு சொன்ன அறிவுரை இதுதான்.. 240 ரன்னை டெல்லி தாண்டியதும் முடிவு பண்ணிட்டோம் – பிரியன்ஸ் ஆர்யா பேச்சு

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கை அபாரமாக துரத்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இதுவே அதிகபட்ச ரன் சேஸிங் ஆக சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பாக பஞ்சாப் மும்பை அணிக்கு எதிராக 262 ரன்களை துரத்தியது சாதனையாக இருந்தது.

எங்களுடைய திட்டம் இதுதான்

இந்த போட்டியில் பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழக்காமல் 116 ரன்கள் குவித்தார்கள். ஐபிஎல் தொடரில் பவர் பிளேவில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்னாக இது பதிவாகியது. இதுவே வெற்றிக்கு மிகவும் முக்கியமான அடித்தளத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து பிரியன்ஸ் ஆர்யா பேசும்போது “பவர் பிளேவில் நாங்கள் அதிரடியாக ரன்கள் எடுக்க முடிந்தால் எங்களால் வெல்ல முடியும் என்பது தான் எங்களுடைய எளிய திட்டமாக இருந்தது. விக்கெட் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது. சுமார் 240 ரன்கள் இலக்காக இருந்தால் அது சவாலாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம்”

- Advertisement -

பாண்டிங் சொன்ன அறிவுரை

“இந்த நிலையில் எதிரணி 260 ரன்கள் தாண்டியதும், நாங்கள் அதிரடியாக மட்டுமே விளையாட வேண்டும் என முடிவு செய்து விட்டோம். அங்கேயே எங்களுடைய திட்டம் முடிந்து விட்டது. மேலும் பிரப்சிம்ரன் விளையாடிய விதத்தை நான் அனுபவித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் அதிரடியாக விளையாடுவதால் நான் அதிக ரிஸ்க் எடுக்கவில்லை”

இதையும் படிங்க: நாங்க ஜெயிக்க வழிகாட்டியது கேஎல்.ராகுல்தான்.. அவர் ஆடும்போது அந்த விஷயத்தைப் பார்த்து ஒரு முடிவு செய்தேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

“ரிக்கி சார் மிகவும் சூழலை மிகவும் பாசிட்டிவாக வைத்திருந்தார். இந்த சீசனில் நாம் மிகவும் வலிமையான அணியாக இருக்கிறோம் எனவே நாம் நம் மீது நம்பிக்கை வைத்தால் போதும் என்று அவர் கூறினார். அது முழுக்க நம்பிக்கையை பற்றி ஏதும் நம்முடைய திறமையை நாமே ஏற்றுக் கொள்வது பற்றியதும் ஆகும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts