இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி டெல்லி நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி புதிய சாதனை படைத்தது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 18.5 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெயில் மிக அதிகம்
இந்த போட்டி குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் ” எனக்கு சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை. இவ்வளவு அதிகமான வெயிலில் வந்து விளையாடும் பொழுது, எதிரணி மிகவும் அதிரடியாக விளையாடும் பொழுது பந்துவீச்சாளர்களால் என்ன செய்வது என்று தெரியாமல் போய்விடும். இன்று அப்படித்தான் நடந்தது”
“இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நன்றாக திரும்பும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே சமயத்தில் சாகல் வந்த பொழுது பந்து கொஞ்சம் நின்றது. அதனால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை”
கேஎல்.ராகுலை பார்த்தேன்
“இன்று கேஎல்.ராகுல் மிகவும் அற்புதமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக விளையாடினார். அவர் பெரிதாக எதையும் முயற்சி செய்யாமல் நின்ற இடத்தில் இருந்து விளையாடினார். இதை பார்த்த பொழுது அவர்களால் செய்ய முடிகின்ற போது எங்களாலும் செய்ய முடியும் என்று நான் நம்பிக்கை கொண்டேன்”
இதையும் படிங்க : 264 ரன்.. டெல்லியை புரட்டி பஞ்சாப் செய்த மெகா சாதனை.. 7 போட்டிகளாக ஸ்ரேயாஸ் டீம் புதிய சரித்திரம்.. டெல்லி பரிதாப தோல்வி
“மேலும் நாங்கள் 220 ரன் இலக்கை இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுதே எட்டி வெற்றி பெற்று இருக்கிறோம். இதையே பேட்டிங் செய்வதற்கு முன்பாக நான் அணி கூட்டத்தில் சொன்னேன். நாங்கள் அதே மனநிலையில் களம் இறங்கி விளையாடினோம். எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக துவக்கத்தை கொடுத்தார்கள். அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்” என்று கூறியிருக்கிறார்.






