இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் அபாரமாக செஞ்சுரி அடித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் இளம் வீரரான அபிஷேக் சர்மா தனது சிறப்பான ஆட்டம் மற்றும் அணியின் வெற்றித் திட்டம் குறித்து விரிவாகப் பேசி உள்ளார்.
தங்களது பேட்டிங் வியூகம் குறித்து அபிஷேக் சர்மா பேசும்போது “நான் நினைத்தபடி பவர்பிளேவில் வைபவ் உடன் இணைந்து களத்தில் ரன்களைக் குவிப்பதும், எதிரணி பவுலர்களின் வேகத்தை சரியாகப் பயன்படுத்தி ஷாட் ஆடுவதுமே எங்களது எளிமையான பிளானாக இருந்தது. வைபவ் முதல் ஓவரில் இருந்து அதிரடியைத் தொடங்கிய விதம் மிகவும் ஸ்பெஷலாக அமைந்தது, அணியின் மொமண்ட்டத்தை மாற்றி அமைத்து ஆட்டத்தை தொடர வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.
தனது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த கோச்சிங் ஸ்டாஃப் மற்றும் கேப்டன் தந்த ஆதரவு குறித்து அவர் பேசும்போது “நமது கோச்களின் உதவியுடன் சைடுஆர்ம் பவுலிங்கை எதிர்கொண்டு தீவிரமாகப் பயிற்சி செய்தோம். மேட்ச் கண்டிஷன்களை சரியாகப் புரிந்து கொண்டு பவுலர்களின் பந்துவீச்சுக்கு ஏற்ப ஷாட்களை விளையாடுவதே பேட்டருக்கு மிக முக்கியமானது, நேற்று நடந்த நல்ல பிராக்டீஸ் செஷன் தான் எனக்கு பெரிதும் கை கொடுத்து உதவியது” என்று கூறி இருக்கிறார்.
தனது இன்னிங்ஸ் குறித்து மேலும் அவர் கூறுகையில் “நமது கடுமையான பயிற்சியின் பலனாக இந்த இன்னிங்ஸ் நடக்கும் என்று நான் முன்பே நினைத்திருந்தேன், அதேபோலவே அது நிகழ்ந்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.
யுவராஜ் சிங் அனுப்பிய கிண்டலான எஸ்எம்எஸ் மெசேஜ் பற்றி அவர் பேசும்போது “யுவராஜ் பாஜி அப்போ என்ன கிரிக்கெட் விளையாடினார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் 12 பந்துகளில் ஐம்பது ரன்கள் அடிப்பது அவ்வளவு ஈசியான காரியம் கிடையாது. அணியை வெற்றி பெறச் செய்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது, வைபவ் உடன் சேர்ந்து நாங்கள் எடுத்த இந்த முடிவு இந்தத் தொடர் முழுவதும் தொடரும்” என்று கூறி இருக்கிறார்.