கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

198 ரன்ஸ்.. வெறும் 13.2 ஓவர்.. உலக சாதனை படைத்த அபிஷேக் சூரியவன்சி ஜோடி.. நியூசிலாந்தை நொறுக்கி இந்தியா அபார வெற்றி

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் சைபர்ட் 6 பந்துகளில் 2 ரன், பின் ஆலன் 25 பந்துகளில் 40 ரன் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்த டேரில் மிட்சல் 52 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் உடன் 89* ரன்கள், பெவான் ஜேக்கப்ஸ் 23 பந்துகளில் 39* ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இந்த முறை துவக்க ஜோடியாக வந்த அபிஷேக் சர்மா மற்றும் பைவப் சூரியவன்சி இருவரும் பவர் பிளேவில் அதிரடியில் நொறுக்கி தள்ளினார்கள். அபிஷேக் ஷர்மா 15 பந்தில் அரை சதத்தை அடித்தார். இந்திய அணி பவர் பிளேவில் மட்டும் 118 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய வைபவ் சூரியவன்சி 19 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அபாரமாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 35 பந்தில் சதம் அடித்து 38 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்தார். இந்திய அணி ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2024 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா பவர் பிளேவில் 113 ரன்கள் எடுத்தது அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை இந்தியாவுக்காக அபிஷேக் ஷர்மா மற்றும் வைபவ் சூரியவன்சி உடைத்து புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள்

- Advertisement -
Published by

Recent Posts