இந்திய கிரிக்கெட்

கம்பீர் நான் சொன்ன மாற்றத்தை செய்ய வேண்டாம்.. இந்த முறை இந்த விஷயத்தை தான் செய்யணும் – ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள்

​நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு மற்றும் பேட்டிங் ஆர்டர் மாற்றம் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது, “முந்தைய போட்டி வரை பிட்ச் பயன்பாட்டில் இருந்ததாலும், மூன்று நாட்களில் இரண்டு போட்டிகள் நடந்ததாலும், ஹாக்லி ஓவல் பெரிய கிரவுண்ட் என்பதாலும் ஸ்பின்னர் ஒருவரை விளையாட வைக்க வேண்டும் என்று கத்திக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது வெலிங்டனில் ஒரே ஒரு போட்டி மட்டுமே இருப்பதால் என்னால் அதைச் சொல்ல முடியாது. இங்கு ஃபாஸ்ட் பவுலர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைக்கும் பிட்ச் இருக்கும். அதனால் வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்று நான் சொல்லப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

​மேலும் அவர் பேசும்போது, “யாரையும் வெளியே உட்கார வைக்க முடியாது என்பதால் அவர்களை விளையாட வைக்க முடியாது. இங்கு உங்களுக்கு மூன்று ஃபாஸ்ட் பவுலர்கள் தேவைப்படுவார்கள். ஒரு ஸ்பின்னர் மட்டுமே போதுமானதாக இருக்கலாம். இதில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்போ தேவயோ இருப்பதாக நான் கருதவில்லை. மேயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் இடையே மாறி மாறி மாற்றங்கள் செய்யக்கூடாது என்பதால் பிரின்ஸ் யாதவ் விளையாடுவதை நான் பார்க்கிறேன். அப்படிச் செய்தால் அது இருவருக்குமே நல்லதாக இருக்காது. இருப்பினும் மயங்க் விளையாடினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

​தொடர்ந்து பேட்டிங் வரிசை குறித்துப் பேசும்போது, “பேட்டிங் ஆர்டரில், மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து வைபவ் சூர்யவன்சியை ஓபன் செய்ய வையுங்கள். தற்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கும் ஓப்பனிங் காம்பினேஷனைக் கலைக்க நீங்கள் விரும்பவில்லை என்பதை நான் புரிகிறேன், ஆனால் இது வேர்ல்ட் கப் அல்ல, அல்லது இன்னும் இரண்டு மாதங்களில் வேர்ல்ட் கப் வரப்போவதும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

​கடைசியாக அவர் கூறும்போது, “நீங்கள் இங்கு பிளேயர்களை தயார் செய்து அணியை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிக்கிறீர்கள். இதைவிட சிறந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. வைபவை நாம் ஏற்கனவே நீண்ட காலம் பெஞ்சில் உட்கார வைத்துவிட்டோம், அவருடைய கான்ஃபிடன்ஸ் எப்படி இருக்கும் என்று யோசிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் நீண்ட காலம் ஃபார்மில் இருப்பது கொஞ்சம் கடினம். இப்போது அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது, தயவுசெய்து அவரை ஓபன் செய்ய விடுங்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts