எனக்கு கவலையே இல்ல.. தேர்வுக்குழு மீது மறைமுக தாக்கு..முச்சதம் விளாசிய பிரித்வி ஷா பேட்டி

0
148

ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர்  பிரித்விஷா 379 ரன்களை விளாசி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.  பிரித்வி ஷா 383 பந்துகளை எதிர் கொண்டு 379 ரன்கள் அடித்துள்ளார்.இதில் 49 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் , 350 ரன்களுக்கு மேல் அடித்த 9வது வீரர் என்ற சாதனையை  அவர் படைத்தார். இதேபோன்று இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானே 191 ரன்களை விளாசினார்.

- Advertisement -

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக பிரித்வி ஷா, ரஹானே சேர்க்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து பேசிய பிர்திவி ஷா, தாம் சரியாக விளையாடாத காலத்தில்  ஆதரவு அளிக்காதவர்கள் குறித்து நான் கண்டுகொள்ளவே மாட்டேன் என்று விமர்சகர்களையும், தேர்வுக்குழுத் தலைவரையும் விமர்சிக்கும் வகையில் பேசினார்.

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவது குறித்து தாம் யோசிக்கவே இல்லை என்று குறிப்பிட்ட பிரித்வி ஷா, தமக்கு தற்போது உள்ள கவனம் எல்லாம் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை வெல்ல வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளனர்.  தமக்கு தாமே நேர்மையாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்வி, எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் ஒரு நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்துவதாக கூறினார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக சுப்மான் கில் சரிவர விளையாடவில்லைம் இதனால் அவருக்கு பதிலாவது பிரித்விஷாவை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு தொடக்க வீரராக பிரித்வி ஷா விளையாட வேண்டும் என பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலே பாகுஷாகிப் நிம்பல்கர் என்ற வீரர் தான் 443 ரன்கள் அடித்தது இன்று வரை சாதனையாக இருக்கிறது. தற்போது பிரித்வி ஷா 379 ரன்களுடன் 2வது இடத்திலும் ,சஞ்சய் மஞ்சுரக்கர் 377 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளனர்.