ஜெயிச்சது நாங்க ஆனா நடந்தது வேற.. தோனி பாய் ஒவ்வொரு முறையும் சொல்றது இதுதான் – பிரித்வி ஷா பேட்டி

0
379
Dhoni

நேற்று ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் துவக்க இந்திய வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. டெல்லி தோல்வி அடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. நேற்று அவர் அணிக்குள் வந்த காரணத்தினால், டாப் ஆர்டரில் இருந்த ஒரு பேட்ஸ்மேன் மிடில் ஆர்டருக்கு சென்றதால், அவர்களுடைய முக்கியமான பலவீனம் சரி செய்யப்பட்டது.

நேற்றைய போட்டியில் பிரித்வி ஷா முதல் விக்கட்டுக்கு டேவிட் வார்னர் உடன் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியாக இருந்தார். மேலும் 27 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் அதிரடியாக 43 ரன்கள் எடுத்தார். வழக்கமாக வேகப்பந்துவீச்சாளர்களை பவர் பிளேவில் ஆடி ரன்கள் எடுத்து, பவர் பிளே முடிந்ததும் ஆட்டம் இழந்து விடுவார் என்கின்ற கருத்தை பொய்யாக்கினார்.

- Advertisement -

டேவிட் வார்னருடன் இணைந்து நேற்று தொடர்ந்து பவர் பிளே தாண்டி விளையாடிய பிரித்வி ஷா ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் முதலில் சிக்ஸர் அடித்து அதிரடியை தொடர்ந்தார். காயத்தில் இருந்து திரும்ப வந்திருக்கும் அவருக்கு, நேற்றைய போட்டியில் கிடைத்த துவக்கம் நல்ல நம்பிக்கையை இந்த தொடர் முழுக்க ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

நேற்றைய போட்டி குறித்தும் தோனி குறித்தும் பேசியுள்ள அவர் கூறும் பொழுது “இந்த வருட ஐபிஎல் தொடர் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடருக்கு நான் வரும் பொழுதும் ஒவ்வொரு பந்தையும் நான் அடிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். நான் இதை அழுத்தமாக நினைக்கவில்லை. இதை எடுத்துக் கொண்டு வெளியே சென்று ரன்கள் அடிக்க நினைக்கிறேன்.

- Advertisement -

இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சி செய்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளைப்பந்து கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. காயத்திற்கு பிறகு திரும்ப வந்து இருப்பதால் ரன்கள் குவிக்க வேண்டும் என்கின்ற பசி இருக்கிறது. பந்தை பேட்டில் மிடிலில் வாங்க வேண்டும். இப்படி நடந்தால் அது உங்களுடைய நாள் என்று உங்களுக்கு தெரியும். எங்களுக்கு துவக்கம் சரியாக அமையாமல் இருந்தது எனவே புத்திசாலித்தனமாக நல்ல துவக்கத்தை பெற நினைத்தேன்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரா கத்துறாங்க.. எங்க கையில என்ன இருக்கு.. நாங்க என்ன பண்ண? – பியூஸ் சாவ்லா பேட்டி

தோனி பாய் பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது. அவர் மைதானத்திற்கு வரும்பொழுது இதுவரையில் என்ன சாதித்து இருக்கிறார், அங்கே இருப்பவர்களுக்கு எப்படியான மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார் என்பதை அவர்களது சத்தத்தின் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். மேலும் அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் மொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலும் என்ன செய்திருக்கிறார், தொடர்ந்து என்ன விஷயங்களை மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து தன்னுடைய அனுபவத்தை கூறிக் கொண்டே இருப்பார். அவர் முன்னிலையில் விளையாடுவதற்கு நான் பெரிய பாக்கியசாலி” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -