நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை தோற்று இந்திய அணி தொடரை இழந்திருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இந்திய அணி தற்பொழுது தொடரை இழந்துவிட்டாலும் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டி இருப்பதால் கடைசி டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே நாளையும் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதற்காக இல்லாமல் வலிமையான அணியே களமிறங்கும்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்காக பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு ஓய்வு கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சூசகமாக இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியிருந்தார். எனவே அவரும் விளையாடுவார் என்றே தெரிகிறது.
கம்பீர் வைக்கும் ட்விஸ்ட்
இந்திய அணியில் திடீரென ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். ஆனால் 15 பேர் கொண்ட இந்திய அணியில் அப்படி யாரையும் சேர்த்துக் கொள்ளவில்லை என அபிஷேக் நாயர் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
மேலும் மும்பை வான்கடை மைதானத்தில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான முறையில் ஆடுகளத்தை அமைக்க கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த போட்டியில் விளையாடிய மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியிலும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இன்று இந்தியா ஏ ஆஸ்திரேலியா ஏ டெஸ்ட்.. எப்படி பார்க்கலாம்.?. போட்டி தொடங்கும் நேரம் மற்றும் பிற விவரங்கள்
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா.






