இன்று இந்தியா ஏ ஆஸ்திரேலியா ஏ டெஸ்ட்.. எப்படி பார்க்கலாம்.?. போட்டி தொடங்கும் நேரம் மற்றும் பிற விவரங்கள்

0
297
Ruturaj Gaikwad and Scott Boland

இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடராக அமைந்துள்ளது பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கு முன்னதாக ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணியும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த டெஸ்ட் தொடர் இந்திய வீரர்களுக்கு பயிற்சி போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணி

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் இந்திய ஏ அணி மோதுகிறது. குறிப்பாக நட்சத்திர வீரர்களான ருதுராஜ், இசான் கிஷான் மற்றும் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், இந்திரஜித் பங்கு பெறுவது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் ஆஸி தொடரின் இந்திய முக்கிய அணியில் இடம் பெற்றுள்ள நிதீஷ் குமார் ரெட்டி, அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முகேஷ் குமார், படிக்கல், கலீல் அகமது நவ்தீப் சைனி மற்றும் அபிஷேக் போரல் போன்ற வீரர்களும் பங்கேற்கிறார்கள். ஆஸ்திரேலிய ஏ அணியை பொறுத்த வரையில் பான் கிராஃப்ட், ஜோஷ் பிலிப் மற்றும் ஸ்காட் போலண்ட் போன்ற முக்கிய முக்கிய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இந்திய ஏ அணி போட்டியை எப்படி பார்ப்பது

அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் மூன்று வரை நடைபெறும். இந்திய நேரப்படி சரியாக காலை 5.30 மணிக்கு தொடங்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 7 முதல் நவம்பர் 10 வரை மெல்போன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி காலை 5 மணி அளவில் தொடங்கும்.

இதையும் படிங்க: ஆஸி டெஸ்ட் முக்கியம்.. விராட் மற்றும் ரோஹித்காக நாம இதை செஞ்சே ஆகணும் – இந்திய அணியின் துணை கோச் பேட்டி

இந்திய ஏ அணி விளையாடும் இந்த டெஸ்ட் தொடரை எந்த தொலைக்காட்சி சேனலிலும் பார்க்க முடியாது. ஆனால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆப் மற்றும் இணையதளத்தில் நேரலையில் பார்க்கலாம்.

- Advertisement -