வெஇ 2வது டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. சாய் சுதர்சன் நீக்கமா?.. முக்கிய 2 மாற்றங்கள்

0
231
ICT

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை மறுநாள் டெல்லி மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

பும்ரா விளையாடுவாரா?

தற்போது இந்தியாவில் விளையாடப்படும் குறிப்பாக சிறிய அணிகளுக்கு எதிராக விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என பல இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் அடுத்து இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா இடம்பெறவில்லை. எனவே அவருக்கு தேவையான ஓய்வு அடுத்து கிடைக்கும் என்பதால், கம்பீர் அவரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைப்பார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

சாய் சுதர்சன் அவ்வளவுதானா?

உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் பெரிய சராசரி இல்லை என்றாலும் கூட சாய் சுதர்சனின் அடிப்படை திறமை காரணமாக அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கிடைத்த நான்கு வாய்ப்பில் அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை.

அதே சமயத்தில் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் அவர் தற்போது இந்திய அணியிலும் இடம் பெற்று இருக்கிறார். எனவே சாய் சுதர்சனை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கிறது. ஆனால் கம்பீர் இன்னொரு வாய்ப்பை அவருக்கு தருவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இனி ஆஸ்திரேலிய அணிக்கு விளையாட வேண்டாம்.. ரூ.100 கோடி ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்

இந்திய பிளேயிங் லெவன்: ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், சாய் சுதர்சன், கேப்டன் கில், துருவ் ஜுரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், சிராஜ் மற்றும் பும்ரா.

- Advertisement -