பிக் பாஷ் லீக் தொடர் தனியார்மயமாக்கப்படவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட் கம்மின்ஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக கிட்டதட்ட் ரூ.100 கோடி தர சிலர் முன் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த ஒப்பந்தத்தை இரு வீரர்களும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு உள்ள தங்கள் அர்ப்பணிப்பை மேற்கோள்காட்டி நிராகரித்துள்ளனர். தற்போது, ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் தங்கள் தேசிய ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கின்றனர்.
இதற்கிடையில், கம்மின்ஸின் SRH உடனான ஒப்பந்தம் கடந்த ஆண்டு 3.7 மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக இருந்தது. அதேசமயம் ஹெட் சுமார் 1.2 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் கம்மின்ஸ், சர்வதேச கிரிக்கெட் மூலம் 3 மில்லியன் டாலர்கள் ஈட்டுகிறார்.
எவ்வளவு பணம் வாங்குகிறார்கள்:
nine.com.au இணையதளத்தின் படி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், ஃபார்முலா 1 ரேஸிங் ஓட்டுநர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி மற்றும் AFL, NFL போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களை விட கிரிக்கெட் வீரர்கள் பின்தங்கியுள்ளனர். தனியார் உரிமையுடன் கூடிய விளையாட்டுகளில் பங்கேற்கும் முன்னணி விளையாட்டு வீரர்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான உள்ளூர் தொடருக்காக ஒருநாள் மற்றும் T20I அணிகளில் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்,.ஆனால் கம்மின்ஸ் முதுகு வலி பிரச்சினையிலிருந்து மீண்டு வருவதால், 2025-26 ஆஷஸ் தொடருக்கு தயாராகும் முயற்சியில் உள்ளார். ஐபிஎல் 2024 ஏலத்தில் கம்மின்ஸ், 20.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
கம்மின்ஸ், ஹெட் செயல்பாடு:
அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஹெட் 6.80 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ஹெட், IPL 2024 இல் அபிஷேக் ஷர்மாவுடன் சிறப்பான தொடக்க கூட்டணியை அமைத்து, 15 போட்டிகளில் 567 ரன்கள் குவித்தார். இதில் அவரது சராசரி 40.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 191.55 ஆக இருந்தது.
2023 உலகக் கோப்பையில் தனது வெற்றியைத் தொடர்ந்து, கம்மின்ஸ் முக்கிய தருணங்களில் கேப்டன் பணியை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் 2024 தொடரில் 16 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 31.44 சராசரியுடன் வீழ்த்தினார்.
இதையும் படிங்க: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்டில் அதிக ரன்கள் எடுக்கப்போகும் வீரர்கள் யார்? அபிசேக் நாயர் கணிப்பு
இறுதிப் போட்டியில் SRH, கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொண்டது. ஆனால் அவர்களின் பேட்டிங் வரிசை சரிந்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. IPL 2025 இல் ஏற்ற இறக்கமான ஆட்டங்களை சன்ரைசர்ஸ் வெளிப்படுத்திய போதிலும், இந்த ஆஸி ஜோடி 2026 சீசனுக்கு முன்பு SRH அணியால் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.






