இந்திய அணி நாளை துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக மும்பையில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.
நாளை இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நெதர்லாந்து, இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஸ்காட்லாந்து, மூன்றாவது போட்டியில் இந்தியா யுஎஸ்ஏ அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
தற்போது இந்தியா வந்திருக்கும் யுஎஸ்ஏ அணி முதல் பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடியது. இந்திய ஏ அணி 240 ரன்கள் எடுக்க திருப்பி விளையாடிய யுஎஸ்ஏ அணி எதிர்பார்க்காத வகையில் 210 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய யுஎஸ்ஏ அணி 201 ரன்கள் குவித்து எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வகையில் அவர்களுடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே அவர்களை குறைவாக எடுத்துக் கொள்ள முடியாது.
இதன் காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் முழு வலிமையான இந்திய அணியை களம் இறக்கவே முயற்சி செய்வார். முக்கிய வீரர்களில் குறிப்பாக பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் எண்ணம் அவருக்கு இருக்காது. எனவே வலிமையான முதல் நிலை பிளேயிங் லெவன் நாளை விளையாடும்.
இதையும் படிங்க : நாங்க உங்களுக்கு நிறைய செஞ்சிருக்கோம்.. ப்ளீஸ் இந்தியா கூட விளையாடுங்க – இலங்கை எழுதிய கடிதம்
இந்திய பிளேயிங் XI: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா.