நாங்க உங்களுக்கு நிறைய செஞ்சிருக்கோம்.. ப்ளீஸ் இந்தியா கூட விளையாடுங்க – இலங்கை எழுதிய கடிதம்

0
9
Pakistan

இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இதில் எப்படியான இழப்புகள் தங்களுக்கு ஏற்படும் என்பது குறித்தும் விலாவாரியாக கூறப்பட்டிருக்கிறது.

தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நாளை துவங்க இருக்கிறது. இந்த தொடர் இலங்கை அரசுக்கு மட்டுமல்லாமல் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் வருமானத்தை கொடுக்க கூடியதாக அமைந்திருக்கிறது. இதற்கு இந்தியா பாகிஸ்தான் அணிகள் கொழும்புவில் பிப்ரவரி 15ஆம் தேதி மோதிக் கொள்ள இருக்கும் போட்டி முக்கியமானதாக அமைகிறது.

- Advertisement -

இலங்கை செய்யும் உதவிகள்

பாகிஸ்தான் சென்ற இலங்கை அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் கூட, மற்ற அணிகள் செல்லாத நிலையில் மீண்டும் இலங்கை பாகிஸ்தான் சென்று விளையாடி இருக்கிறது. அவர்களுக்கு இக்கட்டான நேரத்தில் மிகவும் உதவியாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று அறிவித்திருப்பது ஐசிசி மற்றும் இலங்கைக்கு நேரடியாக பாதிப்பை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் இவர்கள் இருவருக்குமே வருமான இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

- Advertisement -

முக்கியமான வேண்டுகோள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி விளையாடாத பட்சத்தில் சேவை மற்றும் சுற்றுலா என நிறைய வருவாய் இழப்புகள் இலங்கைக்கு ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : கம்பீர் எங்க டீம்ல என்ன செஞ்சார்னா.. அதை இஷான் கிஷான பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. மொத்தமா மாத்திட்டார் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்த போட்டிக்கு இலங்கையில் மட்டுமல்லாமல் வெளியில் இருந்தும் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து விக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்து இருப்பதாகவும், மேலும் பாகிஸ்தானுக்கு நெருக்கடியான காலகட்டங்களில் தாங்கள் அங்கு சென்று விளையாடி உதவிய இருப்பதாகவும், எனவே பாகிஸ்தான் தங்களுக்கு உதவி செய்யும் விதத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

- Advertisement -