5வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முழு பலத்தை காட்டும் கம்பீர்.. டி20 உலக கோப்பைக்கு ஒத்திகை

0
3
Varun

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கேரளா திருவனந்தபுரம் மைதானத்தில் தொடரின் இறுதி டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

இரு நாடுகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை வென்று இருக்கிறது. இந்த நிலையில் நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பான கடைசி போட்டி என்பதால் இரு அணிகளுமே போட்டியை வெல்ல முயற்சி செய்யும்.

- Advertisement -

நியூசிலாந்தின் திட்டம்

நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குஷன் போன்ற முக்கிய வீரர்கள் இந்த தொடரில் இன்னும் விளையாடவில்லை. எனவே கடைசி போட்டியில் இவர்கள் களம் இறங்குவார்கள் என நியூசிலாந்து கேப்டன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். டி20 உலக கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்து அணி தன்னுடைய முழு பலம் கொண்ட அணியை களம் இறக்கும்.

மேலும் நியூசிலாந்து அணி இந்திய அணியை கடைசி போட்டியில் வென்று அந்த நம்பிக்கை உடன் டி20 உலகக் கோப்பைக்கு செல்ல முயற்சி செய்யும். கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வி அடைந்து நியூசிலாந்து வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கம்பீர் நோக்கம்

இந்திய அணியை பொறுத்தவரையில் மீண்டும் முழு பலம் கொண்ட அணியை கடைசி போட்டியில் களம் இறங்குவார்கள். இந்தப் போட்டிக்கு அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று தெரிகிறது. வெற்றியுடன் முடிப்பதே கம்பீர் நோக்கமாக இருக்கும்.

இதையும் படிங்க : பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நன்றி மறந்து விட்டது.. ஐசிசி பாகிஸ்தானை சும்மா விடாது – சுரேஷ் ரெய்னா பேச்சு

இந்திய பிளேயிங் XI : அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ் தீப் சிங் மற்றும் பும்ரா.

- Advertisement -