தற்போது டி20 உலக கோப்பையில் இருந்து பங்களாதேஷ் விலகியதும், பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதியாக அறிவிக்காமல் இருப்பதும் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கூறி தங்களுடைய போட்டிகளை வெளியே மாற்றுமாறு ஐசிசி அமைப்பிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் ஐசிசி இந்த கோரிக்கையை மறுத்துவிட்டது. இதன் காரணமாக பங்களாதேஷ் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காமல் வெளியேறியிருக்கிறது.
பாகிஸ்தானின் மௌனம்
அதே நேரத்தில் பங்களாதேஷ்க்கு ஆதரவு கொடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் டி20 உலகக் கோப்பையில் விளையாடாமல் வெளியேறலாமா? என சிந்தித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதில் இறுதி முடிவை பாகிஸ்தான் திங்கட்கிழமை அறிவிக்கும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் பல தங்களுடைய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மேலும் பாகிஸ்தான் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை புறக்கணித்தால் வருமானரீதியாக பெரிய இழப்பை சந்திக்கும். அதே சமயத்தில் ஐசிசி அமைப்பு அவர்களுக்கு பெரிய தண்டனையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
பங்களாதேஷ் தவறு செய்து விட்டது
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது “பங்களாதேஷில் என்ன நடந்தாலும், இந்தியா பக்கத்தில் இருந்து முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தேவையான எல்லாமே இருந்தது. இருந்த போதிலும் அவர்கள் தற்போது தவறான முடிவெடுத்து இருப்பதாக நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில இந்த 2 டீம் 300 ரன் அடிக்கும்.. இவங்க சதம் அடிச்சா போதும் – ரவி சாஸ்திரி கணிப்பு
“பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு வந்திருந்தால் நிலைமை வித்தியாசமாக இருந்திருக்கும். ஏனென்றால் அவர்களுடைய சுழல் பந்துவீச்சாளர்கள் மிகவும் வலிமையானவர்கள். அவர்களுக்கு இந்த கண்டிஷன் மிகவும் ஒத்துப் போகும். இதனால் அவர்கள் நிறைய இழக்கப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை பாகிஸ்தான் கலந்து கொள்ளாமல் போனாலும் பெரிய தண்டனை ஐசிசி தரப்பில் கொடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.






