இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா தன்னுடன் சேர்த்து ரோகித் சர்மா மற்றும் யுவராஜ் சிங்கை விராட் கோலி ஒருமுறை சீரியஸ் ஆகவே தண்டித்திருக்கிறார் என்ற ஆச்சரியமான செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த காலகட்டத்திலும் கூட இந்திய அணியை ஒருங்கிணைப்பதிலும், ஒரு செய்தியை எல்லா வீரர்களிடத்திலும் ஒன்று சேர்ப்பதிலும் ராகுல் டிராவிட்தான் முன்னின்று வேலைகளை செய்து வந்தார். வீரர்களை கையாளும் பொறுப்பு அவரிடமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மாவின் நெருங்கிய நண்பர்
நடப்பு ஐபிஎல் தொடர் ரோகித் சர்மாவுக்கு ஆரம்பகட்டத்தில் மிகவும் சிரமமாக அமைந்திருந்தது. தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் வெளியேறிக் கொண்டிருந்தார். ஆனால் இறுதியாக மூன்று அரை சதங்கள் அடித்து அவர் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியும் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் வலிமையாக இருக்கிறது.
இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மாவின் மிக நெருங்கிய நண்பராக பிரக்கி அண்ட் ஓஜா இருந்து வருகிறார். அவர் தற்போது ரோகித் சர்மாவின் பார்ம் மீண்டு வந்திருப்பது குறித்து பேசிய பொழுது, இந்திய அணியில் இணைந்து விளையாடிய காலகட்டத்தில் ராகுல் டிராவிட் தங்களை ஒருமுறை தண்டித்த சம்பவத்தை கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
ராகுல் டிராவிட் தண்டித்தார்
இதுகுறித்து பிரக்யான் ஓஜா பேசும் பொழுது ” நானும் ரோகித்தும் இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மிகவும் இளையவர்களாகவும் மேலும் அணிக்கு புதியவர்களாகவும் இருந்தோம். அந்த சச்சின் பாய், தாதா, அனில் பாய், டிராவிட் பாய் என பெரிய மூத்த வீரர்கள் அனைவருமே இருந்தார்கள்”
இதயம் படிங்க : எனக்கு யானையின் மூளை.. கோலிய தப்பா பேசின சேவாக் கவாஸ்கர்.. இப்ப இத தின்னுங்க – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி
“அப்போது நாங்கள் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கி இருந்தோம். இந்த நிலையில் நான் ரோகித் சர்மா மற்றும் யுவராஜ் சிங் மூன்று பேரும் சேர்ந்து ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டோம். அப்பொழுது நாங்கள் டின்னருக்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதாக, ராகுல் டிராவிட் எங்கள் மூன்று பேரையும் அந்த ஹோட்டலில் காலியாக இருந்த வெளி வளாகத்தில் ஓட வைத்து தண்டித்தார்” என்று கூறியிருக்கிறார்.






