நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருவதை அடுத்து ஷேவாக் மற்றும் கவாஸ்கரின் முந்தைய பேச்சுகளுக்கு ஏபி டிவில்லியர்ஸ் ஞாபகம் வைத்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மொத்தம் 505 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். மேலும் அவர் ஏழாவது அரைசதத்தை அடித்து ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான சம்பவம்
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வென்றதின் மூலமாக ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது. இந்த போட்டியில் விராட் கோலி மிகவும் அதிரடியாக விளையாடினார். 200 ஸ்டிரைக் ரேட்டில் அரை சதம் அடித்தார். மேலும் அந்தப் போட்டியில் ஆர்சிபி அணி வெறும் இரண்டு ரன் வித்தியாசத்தில்தான் வென்றது. விராட் கோலியின் அதிரடி பேட்டிங்கும் வெற்றியில் முக்கிய பங்களிப்பை கொடுத்தது.
மேலும் இந்த ஆண்டு ஆடுகளங்கள் பொதுவாக முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடுவதற்கு சாதகமாக பெரும்பாலும் இருப்பதில்லை என்று விராட் கோலி கூறியிருந்தார். எனவே பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்திருந்தார்.
விராட் கோலி பற்றிய விமர்சனம்
கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி ஐபிஎல் தொடரில் மெதுவான சதம் அடித்ததை ஷேவாக் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் விமர்சனம் செய்து பேசி இருந்தார்கள். விராட் கோலி இன்னும் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். தற்போது இதற்கு ஏபி டிவில்லியர்ஸ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : இங்கிலாந்து ODI.. எதிர்கால வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 2 ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. 2027க்கு புதிய திட்டம்
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “விராட் கோலி எப்பொழுதும் இருக்கிறார். அவர்தான் ஆர்சிபிக்கான பாதுகாப்பு. விராட் அருகில் இருக்கும் பொழுது பயப்பட அவசியம் இல்லை. இதுதான் எப்பொழுதும் மாறாத கதையாக இருக்கிறது. மீடியாக்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு அதிக ஞாபக சக்தி கொண்ட யானையின் மூளை இருக்கிறது. நான் மீடியாவில் பேசும் கிரிக்கெட் நண்பர்களை நேசிக்கிறேன். ஆனால் விராட் கோலி மெதுவாக பேட் செய்கிறார் என்று நீங்கள் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? சிஎஸ்கேவுக்கு எதிராக விராட் கோலி 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். இப்பொழுது இதையும் தின்னுங்கள்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.






