வீடியோ- கடவுளே என்ன மாதிரி கேட்ச் இது.. இந்தியாவில் இப்படி ஒரு விக்கெட் கீப்பரா?

0
16389

ஒரு காலத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் தான் அற்புதமான கேட்ச் பிடித்து அசத்துவார்கள். ஆனால் அவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில், இப்பொழுதெல்லாம் இந்தியாவில் உள்ள இளம் வீரர்கள் பலர் அபாரமான கேட்சகள் பிடித்து அசத்துகிறார்கள்.

  இந்த நிலையில் இந்திய அணியின் தற்போது அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு பெரிய பட்டியலே பதிலாக இருக்கிறது.  பண்ட் தற்போது காயம் காரணமாக விளையாடாத நிலையில் இஷான் கிஷன்,  சஞ்சு சாம்சன், ஜித்தேஷ்   ஷர்மா போன்ற வீரர்கள் எல்லாம் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் ஐபிஎல் தொடரில் கலக்கிய பிராப்சிம்ரன் சிங். தியோதர் டிராபி 2023 இன் முதல் ஆட்டத்தில், வடக்கு மண்டலத்தின் விக்கெட் கீப்பர்-பேட்டரான பிரப்சிம்ரன் சிங், தென் மண்டலத்தின் ரிக்கி புய்யை ஆட்டமிழக்க சூப்பர் மேன் போல் பாய்ந்து அற்புதமான கேட்சை பிடித்தார்.

.புதுச்சேரியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் மண்டல இன்னிங்ஸின் 39வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த புய், வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவின் பந்தை அப்பர் கட் செய்ய முயன்றார்.

இருப்பினும், ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்றிருந்த பிரப்சிம்ரன்  வலதுபுறமாக டைவ் செய்து, ஒரே கையால் கேட்ச் பிடித்தார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரிக்கி புயி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றார். பிராப்சிம்ரனின் இந்த கேச்சை பார்த்து அசந்து போன சக அணி வீரர்கள் அவரை கட்டி அணைத்து கொண்டாடினர்.

- Advertisement -

புய் அதிரடியாக விளையாடிய நிலையில், அவரின் இந்த கேட்ச் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் தென் மண்டல இன்னிங்ஸ் வேகத்தை இழந்தது மற்றும் 50 ஓவர்களில் 303 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.வட மண்டலம்  அணி பேட்டிங்கில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.