அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும் ?

0
1022
Indian Cricket Team

தற்போது நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு நினைத்தது போல் செல்லவில்லை. வழக்கம்போல இந்திய அணி இந்த முறையும் பாகிஸ்தான் அணியை எளிதில் விழுந்துவிடும் என்று ரசிகர்கள் கணக்குப் போட்டு வைத்திருந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல ஐசிசி தொடர்களில் தோற்கடிப்பதற்கு மிகவும் கடினமாக பார்க்கப்பட்டு நியூசிலாந்து அணியும் இந்த முறை இந்திய அணியை எளிதாக தோற்கடித்தது. இந்த இரண்டு தோல்விகளால் இந்திய அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்று கேள்விக்குறியாக மாறியுள்ளது. இருந்தாலும் சில சிறிய வாய்ப்புகளால் இந்திய அணியால் அடுத்த சுற்றுக்கு போக முடியும்.

முதலாவது இந்திய அணி வர இருக்கும் மூன்று போட்டிகளிலும் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இந்திய அணிக்கு இன்னமும் 3 ஆட்டங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணியை இந்திய அணி வரவிருக்கும் நாட்களில் சந்திக்க உள்ளது. அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் எந்த போட்டியிலும் தோற்காமல் இந்த மூன்று போட்டிகளிலும் வரிசையாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் என இரு அணிகளும் 6 புள்ளிகளுக்கு மேல் பெறக்கூடாது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னமும் இரண்டு போட்டிகள் உள்ளன அதில் ஒன்று இந்திய அணி கூட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டும். மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 6 புள்ளிகள் தான் அதற்கு கிடைக்கும். அதேபோல நியூசிலாந்து அணியும் இருக்கும் மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றால் தான் 6 புள்ளிகளில் இருக்கும். இந்தியா, நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகளும் 6 புள்ளிகளில் இருந்தால் இரண்டு அடிப்படையில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வரவிருக்கும் இரண்டு போட்டிகளிலும் தோற்றால் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கலாம்.

இப்படி நடந்து இந்திய அணி நல்ல இரண்டு ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது அணி அடுத்த சுற்றுக்கு நுழையலாம். வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.