டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை முதல் முறை தவற விடும் 5 நட்சத்திர வீரர்கள்

0
2824
MS Dhoni and Shane Watson

அனைத்து வித ஃபார்மட்டிலும் டி20 கிரிக்கெட்க்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகம். போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐசிசி உலக டி20 தொடர் 2007ம் ஆண்டு தொடங்கியது. முதல் தொடரை எந்த ஒரு இந்திய ரசிகராலும் மறக்கவே முடியாது. எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி அனல் பறக்கும் போட்டியின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டது.

முதல் உலகக் கோப்பை தொடரில் ஏமாற்றத்தைக் கண்ட பாகிஸ்தான் அணி, அதற்கு அடுத்த வருடம் இலங்கை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அடுத்தடுத்த தொடர்களில் இங்கிலாந்து மற்றும் இலங்கை தலா 1 முறையும், டி20 ஆண்டைகளான வெஸ்ட் இண்டீஸ் இரு முறையும் கோப்பையை வென்றனர். இது வரை நடந்த டி20 தொடர்களில் ஜாம்பவான் வீரர்கள் பலர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர்.

- Advertisement -

2007 முதல் 2016 வரை நடந்த டி20 தொடர் அனைத்திலும் பங்கேற்ற வீரர்களில் ஒருசிலர், இம்முறை நடக்கவிருக்கும் தொடரில் விளையாடப் போவதில்லை. அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

1. எம்.எஸ்.தோனி

ஐசிசி டி20 உலகக்கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்டி, அணியின் ஸ்கோரை மல மலவென உயர்த்தக் கூடியதில் வல்லவர். சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 19:29 முதல் தன்னை ஓய்வு பெற்ற வீரராக கருதிக் கொள்ளும் படி, டுவீட் செய்தார்.

மூன்று வித ஃபார்மட்டிலும் இருந்து ஓய்வு பெற்றவிட்ட தோனி, இம்முறை களத்திற்கு வெளியில் இருந்து போட்டியைக் காண உள்ளார். அதே சமயம், விராட் கோஹ்லி முதல் முறையாக இந்திய அணியை ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வழி நடத்த உள்ளார். பல ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை தழுவிய கோஹ்லி, இம்முறை கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2. யுவராஜ் சிங்

Yuvraj Singh ODI
(Photo by Matthew Lewis/Getty Images)

தோனிக்கு அடுத்து இந்த பட்டியலில் இருப்பது யுவராஜ் சிங். தோனியைப் போலவே இவரும் ஓய்வு பெற்றுவிட்டார். தான் பங்கேற்ற அனைத்து தொடரிலும், சிறப்பாக பங்காற்றி உள்ளார் யுவராஜ் சிங்.

முதல் டி20 உலகக் கோப்பை தொடரில், ஸ்டூவர்ட் பிராடு வீசிய ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி சரித்திரம் படைத்தார். 2016ல் நடந்த தொடரில், காயம் காரணமாக அவர் பாதியிலேயே விலகிவிட்டார். அவருக்கு பதில் மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.

3. ராஸ் டெய்லர்

பல காலங்களாக ராஸ் டெய்லர், நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் அவர் இன்னுமும் ஓய்வு பெறவில்லை. இருப்பினும், அவரை 2021 டி20 தொடரில் பங்கேற்கும் அணியில் அவரை சேர்க்கவில்லை. நியூசிலாந்து அணிக்காக அயராது உழைத்த டெய்லர், இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

பின்னர், நியூசிலாந்து அணி 2021 டெஸ்ட சாம்பியன்ஷிப் வென்று அதை அவருக்கு சமர்ப்பித்தது. கோப்பையுடன் ஓய்வு பெறுவது அனைவரது ஏக்கம். ஒருவேளை எதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்ப்பட்டால், மாற்று வீராக இவரை அழைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது.

4. ஷாஹித் அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர், ஷாஹித் அப்ரிடி. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அப்ரிடி, டெத் ஓவர்களில் சிக்ஸர்கள் மழை பொழிந்து அணியின் ஸ்கோரை உயர்த்தக் கூடியவர்.

ஓய்வை அறிவித்த பின்பு, பல முறை அந்த ஓய்வை ரத்து செய்து விட்டு மீண்டும் அணிக்கு வந்து ஆடியுள்ளார். இறுதியில் 2018ம் ஆண்டு டி20 ஃபார்ம்ட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் இன்னுமும் உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் நாயகன், ஷேன் வாட்சன் 2016 டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிட்டார். ஆஸ்திரேலிய டி20 அணியின் முக்கிய அங்கமாக கருதப்படும் வாட்சனுக்கு, சரியான ஃபேர்வெல் போட்டி கூட அளிக்கவில்லை.

சர்வதேச டி20யில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் தொடர்ந்து மற்ற லீகில் ஆடி வந்தார். ஐ.பி.எலில் சென்னை அணிக்காக 2020 வரை ஆடி வந்தார். பின்னர் அனைத்து வித கிரிக்கெட்டிலும் இருந்து விலகி ஓய்வு அளித்துக்கொண்டார்.