இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் 1990களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோருடன் இணைந்து விளையாடி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தாங்கள் இருவரும் இணைந்து விளையாடிய போது வினோத் காம்ப்ளி தங்களை குறை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று சஞ்சய் மஞ்சுரக்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியாவின் பிரபல வர்ணனையாளர்
கிரிக்கெட் உலகில் தற்போது புகழ்பெற்ற வர்ணனையாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் 1990 கால கட்டங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய பிரபல வீரர்களில் ஒருவர். ராகுல் டிராவிட் போன்று பந்தை பெரும்பாலும் தரையோடு விளையாடுவதில் கைதேர்ந்தவர். மேலும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங்கில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தயங்காமல் தனது கருத்தை வெளியிடுவார்.
இந்த சூழ்நிலையில் தாங்கள் விளையாடிய காலகட்டத்தின் போது தன் மீதும் சச்சின் டெண்டுல்கர் மீதும் வினோத் காம்ப்ளி ஏதேனும் ஒரு குறை கூறிக் கொண்டே இருப்பார் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார். வினோத் கம்ப்ளி ஏதேனும் பேட்டிங்கில் தடுமாறினால் அதற்கான பதிலை அவர் எப்போதும் தயாராக வைத்திருப்பார் எனவும் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
எங்களை திட்டிக் கொண்டே இருப்பார்
இதுகுறித்து சஞ்சய் மஞ்சுரேகர் விரிவாக கூறும்போது ” 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஒவ்வொரு ஆட்டத்திற்கு பிறகும் வினோத் காம்ப்ளி எங்கள் பேட்டிங்கை ஏதேனும் விமர்சித்துக் கொண்டே இருப்பார். அவர் ஆரம்பத்தில் விளையாடவில்லை என்றாலும் எனது அறைக்கும் சச்சின் டெண்டுல்கர் அறைக்கும் வந்து நன்றாக விளையாடாததற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஷார்ட்டை விளையாடத் தவறியதற்காகவோ எங்களை திட்டுவார். குறிப்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் விரைவாக பேட்டிங் செய்திருந்தால் போட்டியை எப்படி எளிதாக முடித்து இருக்க முடியும் என்று கூறுவார்.
இதையும் படிங்க:நீங்க இந்திய வீரர்களுடன் நட்பு வச்சுக்காதிங்க.. அதை அவங்க தப்பா பாக்கறாங்க – பாக் மொயின் கான் பேச்சு
காம்ப்ளிக்கு இறுதியாக சிட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆகி வந்த பிறகு நானும் சச்சினும் ஒருவருக்கொருவர் பார்வைகளை பகிர்ந்து கொண்டோம். போட்டிக்குப் பிறகு அவர் எங்களுக்கு செய்ததை நாங்கள் அவருக்கு செய்ய முடிவெடுத்து பேசத் தொடங்கினோம். அவுட் ஆனது குறித்து அவரிடம் கேட்டபோது, இறுக்கமான பந்துகள் எனக்கு அப்போது வீசப்பட்டன என்று கூறினார். அதாவது அவர் அனைத்திற்கும் ஏதாவது ஒரு பதில் வைத்திருப்பார்” என்று கூறி இருக்கிறார்.