சிஎஸ்கே பாவங்க.. டி20 உலக கோப்பையால் 2024 ஐபிஎல்-லை புறக்கணிக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள்

0
1405

2023 ஆம் ஆண்டிற்கான ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இது 13 வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியாகும். இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வைத்து டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது .

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வில் நடைபெற்ற எட்டாவது டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக வென்றது . இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிகள் ஜூன் மாதம் நான்காம் தேதி துவங்கி ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன .

- Advertisement -

உலக கிரிக்கெட் லீக் மிகப்பெரிய திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இறுதியில் துவங்கிய மே மாதம் இறுதியில் முடிவடையும் . 2024 ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டி தொடர் முன்னதாகவே துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் டி20 உலக கோப்பை வருவதால் காயம் மற்றும் பணிச்சுமையை குறைக்க சில சர்வதேச நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்கலாம். அதற்கு வாய்ப்பு இருக்கும் வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

பென் ஸ்டோக்ஸ் :
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த முறை பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டியில் வழி நடத்தினார் . இவரை 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. ஆனால் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் வெளியே இருந்தார் . பிளே ஆஃப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சென்று விட்டார் . இதனால் அடுத்த வருடம் ஜூன் மாதம் t20 உலக கோப்பை நடக்க இருப்பதால் இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான் .

மிட்சல் ஸ்டார்க்:
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் இறுதியாக 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக ஐபிஎல் ஐ நிராகரித்து வந்தார் . அடுத்த வருடம் உலகக் கோப்பை போட்டிகளும் ஐபிஎல் போட்டிகளும் அடுத்தடுத்து வர இருப்பதால் இவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று உறுதியாக கூறலாம் .

- Advertisement -

பேட் கம்மின்ஸ்:
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனான இவர் கடந்த சில ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கேகேஆர் அணிக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கினார். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஆசஸ் டெஸ்ட் தொடர் காரணமாக இவர் பங்கேற்கவில்லை. அடுத்த வருடம் உலக கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தோன்றுகிறது.

மார்க் வுட்;
இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஆன மார்க் வுட் கடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடினார். ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசி அந்த அணிக்கு முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. வின்னர் தனக்கு குழந்தை பிறக்க இருப்பதால் போட்டியிலிருந்து விலகிய இங்கிலாந்து திரும்பினார் . இந்த முறை ஐபிஎல் தொடருக்கு அடுத்ததாக உலகக்கோப்பை நடக்க இருப்பதால் பனிச்சுமையை கருத்தில் கொண்டு இவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று ஒரு கருத்து பரபரப்பாக வலம் வருகிறது .