“டீமை விட்டு இந்த பிளேயர தயவு செய்து தூக்கிடாதிங்க.. வாய்ப்பு கொடுங்க” – கவாஸ்கர் ரிக்வெஸ்ட்!

0
206
Gavaskar

சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்தது. இதில் டி20 தொடரை சமன் செய்து, ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி, கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இந்திய அணி சமன் செய்து, தோல்வி இல்லாமல் இந்தியா திரும்பி இருக்கிறது.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் இடம் பெற்ற வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்ந்து ருத்ராஜ் மற்றும் முகேஷ் குமார் இருவரும் மூன்று வடிவத் தொடர்களிலும் இடம் பெற்றிருந்தார்கள். ருத்ராஜ் இறுதியாக காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சார்பில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி தவிர யாருடைய பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இரண்டாவது போட்டி நடைபெற்ற கேப்டன் ஆடுகளத்தில் எந்த பேட்ஸ்மேன்னாலும் ரன் அடிப்பது என்பது உறுதியாக சொல்ல முடியாத விஷயமாக இருந்தது. ஆனால் முதல் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது என்பதை ஏற்க வேண்டும்.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழந்த முறை விமர்சனத்துக்கு உரிய ஒன்றாக இருக்கிறது. அவருக்கு ஷார்ட் பந்துகளில் நிறைய பலவீனம் இருக்கிறது. இப்படியான பந்துகளை எதிர்பார்த்து நின்று, வேறு வகையான பண்புகளை தவறான முறையில் ஆடி எளிதாக விக்கெட்டை கொடுத்து விடுகிறார்.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய லெஜன்ட் சுனில் கவாஸ்கர் “தென்னாப்பிரிக்காவின் ஆடுகளங்களில் பேட்டிங் என்பது எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் எளிதான விஷயமாக இல்லை. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே தோல்வி அடைந்த பேட்ஸ்மேன் கிடையாது. இந்திய தரப்பில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி தவிர வேறு யாரும் ரன்கள் எடுக்கவில்லை.

எனவே இந்த விஷயத்தில் ஒரு பேட்ஸ்மேனை மட்டுமே நோக்கி விரலை நீட்டி குறை சொல்லி விட முடியாது. எனவே ஸ்ரேயாஸ் ஐயருக்கு தேர்வுக்குழு இன்னும் அதிகப்படியான வாய்ப்புகள் தர வேண்டும். அப்படித்தான் தேர்வுக்குழு நினைக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

இதற்கடுத்து இந்திய அணி மிக முக்கியமான டெஸ்ட் தொடரான இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவில் வருகின்ற ஜனவரி 25 முதல் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் முக்கியமான பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார்!