ஐசிசி தொடரில் கடந்த முறை நியூசிலாந்தை வென்ற இந்திய அணியின் 11 வீரர்கள்

0
211
Rahul Dravid Ganguly and Javagal Srinath

கடந்த இரு தசாப்தத்தில், மூன்று வித ஃபார்ம்ட்டிலும் பல சாதனைகள் படைத்துள்ளது இந்திய அணி. 2007ல் டி20 உலகக்கோப்பை, 2011இல் 50 ஓவர் உலகக்கோப்பை வென்றது. இரண்டு வருடங்கள் கழித்து, மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி எனும் ஓர் ஐசிசி கோப்பையையும் கைப்பற்றினார். எனினும் கடந்த 20 வருடங்களில், நியூசிலாந்தை மட்டும் இந்தியாவால் வீழ்த்த இயலவில்லை. முதல் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் மட்டுமே இந்திய தோற்றது. பின்னர், 2016 டி20 உலகக் கோப்பை, 2019 அரை இறுதிப் போட்டி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அனைத்து ஃபார்ம்ட்டிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த 2021 டி20 உலகக்கோப்பையிலும் நியூசிலாந்துக்கு எதிரான முக்கியப் போட்டியில், இந்திய அணி சிறப்பாக ஆடத் தவறியது. கடைசியாக இந்திய அணி, 2003ல் நியூசிலாந்து அணியை வென்றது. அப்போதைய இந்திய அணியின் 11 வீரர்களின் தற்போதைய நிலையைப் பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

தொடக்க வீரர்கள் – விரேந்தர் சேவாக் & சச்சின் டெண்டுல்கர்

இந்தியக் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஒப்பனர்களில் இருவர், சேவாக் மற்றும் டெண்டுல்கர். அன்றைய போட்டியில் இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சேவாக்கை 1 ரன்னில் ஷேன் பாண்ட் வெளியேற்றினார். 15 ரன்கள் எடுத்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் விக்கெட்டை, டேரில் டுப்பே எடுத்தார். இரண்டு தொடக்க வீரர்களும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

மிடில் ஆர்டர் – சவுரவ் கங்குலி, முஹம்மது கெய்ப் & ராகுல் டிராவிட்

நியூசிலாந்து அணியை வென்ற இந்திய அணியின் கேப்டன், சவுரவ் கங்குலி. 3 ரன்னில் ஸ்டெம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். கங்குலி தற்போது பிசிசிஐயின் தலைவராக உள்ளார். முஹம்மது கெய்ப் – ராகுல் டிராவிட் இடையேயான 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் 2003 போட்டியில் இந்தியா வெற்றி பெற உதவியது. அவர்கள் இருவரும் தற்போது பயிற்சியாளராக பணியாற்றி வருகின்றனர்.

ஆல்ரவுண்டர்கள் – யுவராஜ் சிங், தினேஷ் மோங்கியா & ஹர்பஜன் சிங்

யுவராஜ் சிங், அப்போட்டியில் பேட்டிங்கும் செய்யவில்லை பவுலிங்கம் போடவில்லை. அவர் தற்போது ஓய்வில் உள்ளார். மற்றொரு ஆல்ரவுண்டர் தினேஷ் மோங்கியா, தான் வீசிய ஒரே பந்தில் 1 விக்கெட் எடுத்தார். ஹர்பஜன் சிங், அபாரமாக பந்துவீசி 10 ஓவர்களுக்கு வெறும் 28 ரன்களே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவர் இன்னும் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பந்துவீச்சாளர்கள் – ஜாகீர் கான், ஆசிஷ் நெஹ்ரா & ஜவகல் ஶ்ரீநாத்

வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். அனைவரும் மொத்தமாக சேர்த்து 26 ஓவர்கள் பந்துவீசினர். ஜாகீர் கான் 4 விக்கெட்டும், ஆசிஷ் நெஹ்ரா மற்றும் ஶ்ரீநாத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மூவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.