ஐபிஎல் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. எல்லா வருடமும் குறைந்தபட்சம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் ஒரே அணி சென்னை அணியாக இருந்தது. சென்ற ஆண்டு மட்டும் தான் அதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக மூன்று முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்து முறை ரன்னர் அப் பட்டத்தையும் வென்றுள்ளது. அப்படிப்பட்ட ஜாம்பவான் அணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியில் விளையாடிய வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்
பார்த்தீவ் பட்டேல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியில் பார்த்தீவ் பட்டேல் ஓபனிங் வீரராக களமிறங்கினார் அந்த போட்டியில் பார்த்தீவ் பட்டேல் 10 பந்துகளில் 15 ரன்கள் குவித்தார். பார்த்தீவ் பட்டேல் குஜராத் அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது மேலும் சென்னையில் இருந்து வெளியேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேத்யூ ஹைடன்
mathew hayden CSK pic.twitter.com/TkIziL2YtQ
— sunder ramu (@sunderramu) September 1, 2013
பார்த்தீவ் பட்டேல் உடன் களமிறங்கி ஓபனிங் விளையாடிய ஹைடன் அப்போட்டியில் 17 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். சென்னை அணிக்காக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார். அதன்பிறகு தற்பொழுது ரிட்டையர் ஆகிவிட்ட ஹைடன் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும், ஆஸ்திரேலிய கல்வி அறக்கட்டளை ஒன்றுக்கு தூதுவராகவும் தற்பொழுது இருந்து வருகிறார்.
மைக்கேல் ஹசி
அந்தப் போட்டியில் விளையாடிய ஹசி அந்த அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய துணையாக இருந்தார். 114 ரன்கள் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியிலேயே தூள் கிளப்பினார். தற்பொழுது ரிட்டையர் ஆகி விட்ட ஹசி தமிழை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவரை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திர சிங் தோனி
2008 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 200 போட்டிகளுக்கு கேப்டனாக சென்னை அணியை வழி நடத்தியுள்ளார். மூன்று கோப்பையை பெற்று தந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆவார். தற்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெடிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டில் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் பயணத்தையும் முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் ரெய்னா
சென்னை அணிக்கு தலை தோனி என்றால் சின்ன தலை சுரேஷ் ரெய்னா தான். அந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா 32 ரன்கள் குவித்தார். அங்கே ஆரம்பித்த அவர் இன்றுவரை சென்னை அணிக்காக அதிக ரன்கள் அடித்த ஒரே வீரர் சுரேஷ் ரெய்னா தான். தோனி தனது ஆய்வறிக்கையை வெளியிட்ட அடுத்த நிமிடம் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டார். ஐபிஎல் தொடரிலும் தோனியை போலவே இவரும் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டில் தனது பயணத்தை முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரமணியம் பத்ரிநாத்
Throwback to 2011 qualifier #RCBvsCSK in wankhede , eventually #CSK again beat #RCB in the #IPL final in chepauk pic.twitter.com/zxlsdPvpzp
— S.Badrinath (@s_badrinath) October 25, 2020
அந்தப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் 14 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அசத்தினார். சென்னை அணிக்கு ஆரம்ப கட்டத்தில் விளையாடிய பத்ரிநாத் அவ்வப்போது மிக பெரிய அளவில் தனது பங்கை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட சுப்ரமணியம் பத்ரிநாத், பஸ்ட் கிளாஸ் கிரிகெட் தரப்பில் இதுவரை 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பத்ரிநாத் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக தனது பணியை செய்து வருகிறார்.
ஜேக்கப் ஓரம்
நியூசிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான ஓரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் போட்டியில் 10 பந்துகளில் 13 ரன்கள் குவித்தார். மேலும் பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 37 ரன்களை கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஓரம் தற்பொழுது மனவடு என்கிற கிரிக்கெட் டீமுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
முத்தையா முரளிதரன்
முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முத்தையா முரளிதரன் தனது ஐபிஎல் வாழ்க்கையில் முதல் விக்கெட்டாக தனது சொந்த ஊரைச் சேர்ந்த சங்ககாராவின் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் பல போட்டிகளில் நம்பிக்கை வீரராக முத்தையா முரளிதரன் சென்னை அணியால் கருதப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எப்பொழுதோ ஓய்வு பெற்ற முத்தையா முரளிதரன் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கோச்சிங் ஸ்டாஃப் ஆக பணிபுரிந்து வருகிறார்.
ஜோகிந்தர் சர்மா
ஜோகிந்தர் சர்மா தனது முதல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடினார். முதல் போட்டியிலேயே பஞ்சாப் அணியில் விளையாடிய நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார் அதுவே அவரது முதல் ஐபிஎல் விக்கெட் ஆகும். அதன் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் ஷர்மா தற்போது ஹரியானாவில் போலீசாக பணி புரிந்து வருகிறார்.
மன்பிரீட் கோனி
13 Years of #CSK 💛
— Broken Heart 💘 || CSK 💛 (@JayaSeelancvf) April 19, 2020
* First Run parthiv Patel
* First Four Hayden
* First Six Hayden
* First Century M Hussey
* First Wicket Gony
* First Catch Parthiv Patel@ChennaiIPL pic.twitter.com/WoPZwXuc6n
சென்னை அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்து நன்றாக விளையாடி அதன் பின்னர் இந்திய அணியில் நுழைந்த கோனி, சரியாக விளையாடாத காரணத்தினால் அவரால் அதிக ஆண்டு காலம் இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது. சென்ற ஆண்டு தனது ஓய்வறிக்கையை வெளியிட்ட கோனி கடைசியாக சர்வதேச கனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்குடன் இணைந்து விளையாடினார்.
பழனி அமர்நாத்
இந்த வீரரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் போட்டியில் விளையாடிய பழனி அமர்நாத் தனது முதல் விக்கெட்டாக ஜேம்ஸ் கோப்பை கைப்பற்றினார். அதன் பின்னர் சரியான வகையில் விளையாடாத காரணத்தினால் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடைசியாக பழனி அமர்நாத் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆட்டத்தில் மதுரை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.