சென்னை அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய 5 வீரர்கள்

0
369
Vijay Shankar and Mark Wood CSK

ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் சென்னை அணி மிகவும் தனித்துவமான அணி ஆகும். சென்னை அணி எப்பொழுதும் அதனுடைய வெற்றி வீரர்களை அவ்வளவு எளிதில் அடிக்கடி  மாற்றாது. அதன் காரணமாகவே தொடர்ந்து அந்த அணியால் வெற்றிகளை ஒவ்வொரு தொடரிலும் குவிக்க முடிகிறது என்று ஒரு சில கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

அப்படி சென்னை அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்து விளையாடிய வீரர்களை பற்றி பார்ப்போம்

- Advertisement -

5. விஜய் சங்கர்

தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான விஜய் சங்கர் 2014ஆம் ஆண்டு

சென்னை அணிக்காக விளையாடினார். அந்த சமயத்தில் தமிழக அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த விஜய் சங்கருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாட தோனி வாய்ப்பு வழங்கினார். எனினும் அவரை விட சிறப்பான சீனியர் வீரர்கள் அணியில் இருக்கையில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

- Advertisement -

அதன் பின்னர் அங்கிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நகர்ந்தார். இங்க அவர் தற்பொழுது நிரந்தரமாக விளையாடி வருகிறார். மொத்தமாக 36 ஐபிஎல் போட்டிகளில் 668 ரன்களை இதுவரையில் விஜய் சங்கர் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இவரது ஆவரேஜ் 27.83 ஆகும் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 127.48 ஆகும்.

4. அருண் கார்த்திக்

Arun Karthik CSK
Photo source: TNPL

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அருண் கார்த்திகை பேக் அப் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்ந்தெடுத்தது. மகேந்திர சிங் தோனி விளையாடாத பட்சத்தில் அருண் கார்த்திக் விளையாட வைப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும்.

ஆனால் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அருண் கார்த்திக் விளையாடினார். அந்த போட்டியில் வெறும் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே குவித்தார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களம் இறங்கி 16 போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஜான் ஹாஸ்டிங்ஸ்

சென்னை அணிக்காக சாம்பியன் லீக் தொடரில் ஒரே ஒரு முறை ஜான் ஹாஸ்டிங்ஸ் விளையாடினார். தோனி எப்பொழுதுமே சென்னை அணிக்கு ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை களமிறங்குவார். அதன்படி ஜான் ஹாஸ்டிங்சை ஒரே ஒரு போட்டியில் களமிறங்கினார்.

John Hastings CSK

அந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். அதன் பின்னர் அவருக்கு எந்தவித வாய்ப்பும் வழங்காத காரணத்தினால், அவர் விளையாடிய அந்த ஊர் போட்டியில் மட்டும் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் விளையாடிய ஒரே போட்டியாக அமைந்தது.

2. திசாரா பெரேரா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் அதனுடைய நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து பந்துவீச்சாளர்  பிராவோவை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்கும். அதற்கு தகுந்தார்போல் அவரது பந்துவீச்சும் பேட்டிங் பங்களிப்பும் அமைந்துவிடும். அவருக்கு பேக் அப் வீரராக ஒரு சில வீரர்களை சென்னை அணியை தன் கைவசம் வைத்து இருந்தாலும் அனைத்து போட்டிகளிலுமே பிராவோக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அதன்படி பேக் அப் வீரர்கள் வரிசையில் திசாரா பெரேரா ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1. மார்க் வுட்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 2018 ஆம் ஆண்டு சென்னை அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு தொடரில் ஒரே ஒரு போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பில் மிக அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மிகப்பெரிய ஏமாற்றத்தை அவர் அளித்தார். 

அதன் காரணமாக அதற்கு அடுத்த வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்படாமல் போனது. வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தினால் தொடரின் பாதியிலேயே அவர் தனது சொந்த ஊருக்கு கிளம்பினார். ஆனால் மார்க் வுட் தற்பொழுது இங்கிலாந்து அணியின் டி20 போட்டிகளில் முன்னணி பந்துவீச்சாளர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.