ஐபிஎல் ஏலம்.. அவர் மட்டும் வந்து இருந்தா 42 கோடி போயிருப்பார்.. முன்னாள் இந்திய வீரர் அதிரடி பேட்டி.!

0
2628

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர்களான பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைகப்பட்டடது.

இதன்பின் அடுத்த சில மணி நேரங்களிலேயே பேட் கம்மின்ஸின் சாதனை முறியடிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பியுள்ள ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடி கொடுத்து கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கியது.

- Advertisement -

கடைசி வரை குஜராத் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் போட்டியாக அமைந்தது. இறுதியில் மற்ற வீரர்களை வாங்க முடியாமல் போகும் என்பதால், குஜராத் அணி ஏலத்தில் இருந்து பின் வாங்கியது. சுமார் ரூ.25 கோடிக்கு ஸ்டார்க் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு ரூ.17 கோடி, பும்ராவுக்கு ரூ.12 கோடி, தோனிக்கு ரூ.12 கோடியே ஐபிஎல் அணிகள் ஊதியமாக வழங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு அணிக்கும் விஸ்வாசமாக இருக்கும் இந்திய வீரர்களை விடவும், ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு அதிக தொகை ஏலத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

சில சீசன்கள் விளையாடிவிட்டு தேவை என்றால் ஒரு சீசனில் ஓய்வெடுத்து கொள்ளும் உரிமை வெளிநாட்டு வீரர்களுக்கு உள்ளது. ஆனால் இந்திய வீரர்கள் காயமடைந்தால் மட்டுமே ஒரு சீசனில் இருந்து விலக முடியும். இதுகுறித்து இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு வீடியோக்களில் பேசி வந்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் ஏலம் குறித்து முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பேசும் போது, ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளுக்கும் இனி பர்ஸ் தொகை ரூ.200 கோடியாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதில் ரூ.150 கோடி இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும், மீதமுள்ள ரூ.50 கோடி வெளிநாட்டு வீரர்களுக்கு செலவு செய்யலாம் என்ற விதி கொண்டு வரப்பட வேண்டும்.

ஒருவேளை விராட் கோலி போன்ற வீரர்கள் ஐபிஎல் ஏலத்திற்கு வந்தால் அனைத்து அணிகளும் அவரை வாங்குவதற்கு போட்டியிடும். குறைந்தபட்சம் ரூ.42 கோடிக்கு அவர் ஏலத்தில் வாங்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இதனால் வரும் காலங்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு என்று பிரத்யேகமாக தொகை பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.