சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் விருது பெற்ற பின்பும் இந்திய அணிக்குள் நுழையாத 5 வீரர்கள்

0
5488
Baba Aparajith and Vijay Zol

பிசிசிஐ என்று அழைக்கபடும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் , எல்லா வருடமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு விருது அளித்து வருகிறது. வீரர்களை ஊக்குவிக்கும் ஓர் கருவியாக இவ்விருது விளங்குகிறது. இதே போல் ஐ.பி.எலில், ‘ வளர்ந்து வரும் வீரர் ‘ (எமர்ஜிங் பிளேயர்) எனும் விருது வழங்கப்படுகிறது. இது வெளிநாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்.

சி.கே.நாயுடு டிராபி, கோச் பேஹர் டிராபியில் வெளிப்படுத்தும் திறனின் மூலம் ஒரு வீரருக்கு இவ்விருது வழங்கப்படும். பெரிதும் மதிக்கப்படும் இவ்விருதை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இவ்விருதை வாங்கினால், நிச்சயம் அவர் எதிர்காலத்தில் மதிக்கத்தக்க கிரிக்கெட் வீரராக வருவார் என்று எண்ணப்படுகிறது. ஆனால் ஒரு சில வீரர்கள் இவ்விருதை வாங்கிய பிறகு, சிறப்பாக ஆடத் தவிறியுள்ளனர். அவர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. மன்தீப் சிங் – சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் 2006/07 & எம்.ஏ.சிதம்பரம் டிராபி – சிறந்த யு-15 கிரிக்கெட் வீரர் 2006/07

இவர் உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பாக ஆடியுள்ளார். அதனால் அவருக்கு தேசிய அணியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

மந்தீப் சிங், நடப்பு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். தற்போது அவரது ஃபார்ம், எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதனால், அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வருவது கடினம் தான்.

2. அன்கிட் பாவ்னே : எம்.ஏ.சிதம்பரம் டிராபி – சிறந்த யு-15 கிரிக்கெட் வீரர் 2007/08

2007ல் அன்கிட் பாவ்னேவின் ஆட்டத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர். யு-15 பிரிவில் அவ்வருடம் சிறப்பாக ஆடி இவ்விருதைப் பெற்றார். ஒரு சில வருடங்கள் கழித்து முதல் தர கிரிக்கெட்டில், மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்கினார்.

- Advertisement -

உள்ளூர் போட்டிகளில் என்னதான் நன்றாக ஆடினாலும், அவரால் மேலும் முன்னேற இயலவில்லை. ஐ.பி.எலிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. பாபா அபராஜித் – சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் 2009/10 & எம்.ஏ.சிதம்பரம் டிராபி – சிறந்த யு-15 கிரிக்கெட் வீரர் 2009/10

Baba Aparajith TNPL

தமிழக வீரரான பாபா அபராஜித், இதுவரை உள்ளூர் போட்டிகள், ரஞ்சிக் கோப்பை, சயத் முஸ்டக் அலி கோப்பை என அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பங்களித்துள்ளார். சோகம் என்னவென்றால் அவர் இன்னும் ஒரு ஐ.பி.எல் போட்டியில் கூட பங்கேற்கவில்லை என்பதுதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் வாங்கியது.

ஆனால் ஒருமுறை கூட இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இவரது திறமையை நிரூபிக்க ஓரிரண்டு போட்டிகளில் ஆவது வாய்ப்புக் கொடுத்திருக்கலாம் என அனைத்து தமிழக ரசிகர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

4. விஜய் ஜோல் – எம்.ஏ.சிதம்பரம் டிராபி – சிறந்த யு-16 கிரிக்கெட் வீரர் 2010/11

இவர் இரண்டு முறை ஐசிசி யு-19 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளார். இரண்டு முறையும் சுமாராக ஆடினார். 2012ல் ஆறு போட்டிகளில் 151 ரன்களும் 2016ல் ஐந்து போட்டிகளில் 120 ரன்களும் அடித்தார்.

மேலும், ஐ.பி.எலில் தன்னுடைய திறமையை நிரூபிக்க இவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் ஒரு சில போட்டிகளில் ஆடினார். தொடர்ந்து சிறப்பாக ஆடத் தவறியதால், நிர்வாகம் அவரை அணியை விட்டு நீக்கியது.

5. ஹர்பிரீத் சிங் – எம்.ஏ.சிதம்பரம் டிராபி – சிறந்த யு-19 கிரிக்கெட் வீரர் 2008/09

மற்றவர்களைப் போல இவரும் உள்ளூர் போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அதை பெரிதளவில் அவரால் கொண்டுபோக முடியவில்லை. முக்கியமான போட்டிகளில் இவர் சரியாக பங்களிக்கவில்லை. அதனால் இந்திய அணிக்குள் நுழைய இயலவில்லை. மேலும், ஐ.பி.எலிலும் இவருக்கு பெரிதாக வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.