விராட் கோலியுடன் விளையாடத் தொடங்கி அதன் பின்னர் காணாமல் போன 5 வீரர்கள்

0
1159
Subramaniam Badrinath and Virat Kohli

விராட் கோலி வாழ்க்கை வரலாறு அவ்வளவு எளிதில் ஒரு கட்டுரையில் கூறிவிட முடியாது. சுருக்கமாக கூற வேண்டுமென்றால் 2008 ஆம் ஆண்டு அண்டர் 19 இந்திய அணியை உலக கோப்பை தொடரில் வழிநடத்தி கோப்பையை பெற்றுத்தந்தார். அதன்பின்னர் 2008ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கினார்.

சில மாத காலத்திலேயே இந்திய அணிக்காக அதன்பின்னர் சர்வதேச அளவில் விளையாட தொடங்கினார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்திலேயே தான் மேற்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அதன் பின்னர் நடந்த 2015-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரர் ஆக முதல் சதத்தை அடித்தார். அதன் பின்னர் நடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை ஒரு கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி, சர்வதேச அளவில் ஒரு சிறந்த வீரராகவும் ஒரு சிறந்த கேப்டனாகவும் தற்பொழுது விராட் கோலி திகழ்ந்து வருகிறார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

ஆனால் விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய ஒரு சில வீரர்கள் அதன் பின்னர் காணாமல் போன கதை உண்டு, தற்போது அவர்களைப் பற்றி பார்ப்போம்.

சுப்ரமணியம் பத்ரிநாத்

டாமஸ்டிக் இல்லாமல் கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி அதன் பின்னர் சென்னை அணியில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் இந்திய அணியில் விளையாடும் மாய்ப்போம் பின்னாளில் கிடைத்தது.

ஆனால் கிடைத்த வாய்ப்பை இவர் பயன்படுத்த தவறினால் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஏழு ஒருநாள் போட்டியில் விளையாடி வெறும் 78 ரன்கள் மட்டுமே இவர் குவித்தார். பேட்டிங்கில் இவரது அவரேஜ் 15.8 என்பது மிகவும் மோசமாக அமைந்தது. அதன் காரணமாகவே அதற்கு அடுத்தபடியாக சர்வதேச போட்டிகளில் இவருக்கான வாய்ப்பே வழங்கப்படாமலையே போனது.

- Advertisement -

பிரக்யன் ஓஜா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாட தொடங்கினாள் டெஸ்ட் போட்டிகளில் இவர் மிக சிறப்பாக விளையாடினார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது ஆனால் அதே சமயம் ஒரு நாள் போட்டிகளில் இவ்வளவு சிறப்பாக விளையாட முடியாமல் போனது.

மொத்தமாக 18 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை மட்டுமே அவரால் கைப்பற்ற முடிந்தது. எனவே அதன் காரணமாக அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் இவர் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது

மனோஜ் திவாரி

2007ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் இவர் விளையாடினார். அதற்கு அடுத்த போட்டியில் விளையாட இவருக்கு மூன்று வருடம் தேவைப்பட்டது. இருப்பினும் 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் எடுத்த சதம் மற்றும் ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக இவர் எடுத்த 4 விக்கெட்டுகள் அனைத்துமே வீன் போனது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு வழங்கப் படாமல் போனதால் 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய போட்டி இவருடைய கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

யூசப் பதான்

இவரது அதிரடி ஆட்டம் காரணமாக 2017ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இவரது பெயரும் இடம்பெற்றது. மொத்தமாக இவர் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 810 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது பட்டிங் அவரேஜ் 27 என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக அதற்கடுத்த போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற இது போதாத நிலையில் இவருக்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து வழங்கப் படாமல் போனது.

அதன் பின்னர் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரில் சமீபகாலமாக இவர் சரியாக தொடர்ச்சியாக விளையாடாத காரணத்தினால் 2020ஆம் ஆண்டு ஐதராபாத் அணி நிர்வாகம் இவரை தங்களது அணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மன்பிரீட் கோனி

வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு வீரர். உனது முதல் ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் பங்கெடுத்து 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அதன் பின்னர் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே இவர் கைப்பற்றினார்.

இருப்பினும் அதற்கு அடுத்த இவருக்கு வாய்ப்புகள் வழங்காத காரணத்தினால் ஒருநாள் போட்டிகளில் அதன் பின்னர் இவரால் கடைசிவரை விளையாட முடியாமல் போனது. எனினும் அதன் பின்னர் ஐபிஎல் போட்டியில் பங்கெடுத்து பல அணிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.