ஜிம்பாப்வே மற்றும் மற்ற நாட்டு அணிக்காக விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்

0
2379
Sam Curran

உலக அளவில் கால்பந்து விளையாட்டுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்டு தான். குறிப்பாக கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு விளையாட்டாக பார்ப்பது கிடையாது. தங்களது அன்றாட வாழ்வில் கிரிக்கெட்டையும் ஒரு பகுதியாகவே வைத்து இந்திய ரசிகர்கள் பார்ப்பார்கள் அந்த அளவுக்கு கிரிக்கெட் அவர்களது ரத்தத்தில் ஊறி இருக்கிறது. இந்தியாவைப் போலவே ஆசிய கண்டத்தைச் சார்ந்த அனைத்து அணி கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்ப்பார்கள் மற்றும் ரசிப்பார்கள்.

அதைப்போலவே ஆஸ்திரேலியா, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சார்ந்த அணி ரசிகர்களும் அதற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் விளையாட்டை அதிக அளவில் தங்களது அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகவே அதை பார்க்கிறார்கள். இதில் ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய கண்டத்தைச் சார்ந்த கிரிக்கெட் அணிகள் பல்வேறு வெற்றிகளை பார்த்த கிரிக்கெட் அணிகள் ஆகும்.

- Advertisement -

ஆப்பிரிக்க கண்டத்தில் மொத்தம் மூன்று அணிகள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அவைகள் தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகும். தென்னாப்பிரிக்க அணியை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தங்களது வளர்ச்சியை காட்டிக் கொண்டு வருகின்றனர்.

ஜிம்பாவே அணியில் விளையாடி அதன்பின்பு மற்ற நாடுகளுக்கு விளையாடி வரும் வீரர்களை அவ்வளவாக நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவர்களைப்பற்றி தற்பொழுது இந்த கட்டுரையில் பார்ப்போம்

1. காலின் கிரான்ஹோம்

நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இவர் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்பது பலருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர்.

- Advertisement -

பலரும் இவர் நியூசிலாந்து நாட்டில் பிறந்தவர் என்று நினைப்பார்கள் ஆனால் இவர் ஜிம்பாப்வே நாட்டில் பிறந்தவர் ஆவார். இவர் 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணிக்காக அண்டர்-19 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியவர். சுவாரசியமான விஷயமாக, அந்த உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

2. ரெஜினோல்ட் நேஹொண்டே

30 வயதான இவர் ஜிம்பாவே நாட்டில் பிறந்தவர் ஆவார். வலதுகை ஆஃப் பிரேக் பௌலிங் போடும் இவர் 2008ஆம் ஆண்டு ஜிம்பாப்வே நாட்டுக்காக அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் இவரால் தனது தொடர் வெற்றிகளை வயது ஆகஆக காட்ட முடியாத காரணத்தினால், ஜிம்பாப்வே நாட்டில் இருந்து போட்ஸ்வானா நாட்டுக்குச் சென்றார். அங்கே சென்று போட்ஸ்வானா அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டு அணிக்காக இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சாம் கரன்

சாம் கரன் அடிப்படையில் ஜிம்பாப்வே நாட்டைச் சார்ந்தவர். அவரது அப்பா கெவின் கரன் ஜிம்பாப்வே நாட்டு குடிமகன் ஆவார். அவர் ஜிம்பாப்வே கிரிக்கெட் கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மகன்கள் தான் டாம் கரன் மற்றும் சாம் கரன். சாம் கரன் ஜிம்பாப்வே அணிக்காக அண்டர் 13 போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. கேரி பேலன்ஸ்

Gary Ballance

ஜிம்பாப்வே நாட்டில் பிறந்து 2006 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக அண்டர்-19 உலக கோப்பை தொடரில் விளையாடியவர்.

ஆனால் அதன் பின்னர் அவர் சில காரணமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்று அங்கே குடியுரிமை பெற்று இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். இங்கிலாந்து அணிக்காக இவர் 16 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஜான் ட்ரைகோஸ்

இவர் 1947ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். இவர் தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மீண்டும் ஜிம்பாப்வே நாட்டுக்கு சென்று விட்டார். இவர் தனது வாழ்நாளில் மொத்தமாக ஏழு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடைசியாக 1993ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.