அஸ்வின் பற்றி பீட்டர்சன் விமர்சனம்.. தினேஷ் கார்த்திக் தந்த பதிலடி.. சுவாரசிய சம்பவம்

0
440
Pieterson

இந்திய அணி இன்று இரண்டாவது டெஸ்டில், மூன்றாவது நாளின், மூன்றாவது செஷனில், வெறும் 28 ரன்கள் மட்டும் எடுத்து நான்கு விக்கெட்டுகளை கொடுத்திருக்கிறது.

குறைந்தபட்சம் இங்கிலாந்து அணிக்கு 450 ரன்கள் இலக்காக இந்திய அணி கொடுக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் மட்டும் இங்கே எடுத்து 399 ரன்கள் மட்டுமே இலக்காக கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இன்று இந்திய அணி எட்டு விக்கெட் இழந்திருந்த பொழுது களத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பும்ரா இருவரும் இருந்தார்கள். இதில் அஸ்வின் ஓவரின் ஆரம்பங்களில் சிங்கிள் ரன் எடுக்க முயற்சி செய்யவில்லை.

ஒரு முனையில் ஓவருக்கு ஒருவர் என மட்டுமே அஸ்வின் எடுத்து வந்தார். கடைசியில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என அவர் ஆட்டத்தில் வேகம் காட்ட ஆரம்பித்த பொழுது, பும்ரா தேவையில்லாமல் விளையாடி விக்கெட்டை கொடுத்தார். இது அஸ்வினை கோபப்படுத்தியது. 26 பந்துகள் சந்தித்த பும்ரா ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் மற்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரி இருவரும் அஸ்வினின் அணுகுமுறை குறித்து விமர்சனம் செய்தார்கள். இவர்களுக்கு சரியான பதிலை தினேஷ் கார்த்திக் அங்கேயே கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

அஸ்வின் குறித்து விமர்சனம் செய்த பீட்டர்சனுக்கு தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” அஸ்வின் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய முடியுமோ அவ்வளவு நேரம் ஆடுகளம் மோசம் அடையும் என்று நினைக்கிறார். பிற்பகுதியில் பேட்டிங் செய்ய வரும் பொழுது அவர்களுக்கு விக்கெட் நிலைமை மோசமாக அமையும். இதுதான் அவர் மெதுவாக விளையாட காரணம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “சதம் அடிச்சேன்தான்.. ஆனாலும் தப்பு பண்ணிட்டேன்.. அப்பாவால எதுவுமில்ல” – சுப்மன் கில் பேச்சு

ஆனாலும் தினேஷ் கார்த்திக் கூறியதை ஏற்காத ரவி சாஸ்திரி பேசும்பொழுது “அவர்கள் தேநீர் இடைவேளையின் போது இருந்ததை பார்த்த பொழுது 430-440 ரன்கள் வரையில் டார்கெட் ஆக கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோர் போர்டை நகர்த்தவில்லை” என்று கூறி இருக்கிறார்.