மத்த டீம் பிளான் பத்தி எங்களுக்கு தெரியாது.. ஆனா நாங்க இத மட்டும் செஞ்சிட்டா போதும் – சிமர்ஜித் சிங் பேச்சு

0
411
Simarjeet

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிக முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சிஎஸ்கே பந்துவீச்சாளர் சிமர்ஜித் சிங் போட்டி நிலைமைகள் குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அந்த அணிக்கு முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் 43 ரன்கள் வந்த நிலையில் ஜெய்ஸ்வால் 21 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 25 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் ஜோடி சேர்ந்து 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சஞ்சு சாம்சன் மெதுவான ஆடுகளத்தில் பேட்டிங்கில் தடுமாறி 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து உள்ளே வந்த துருவ் ஜுரல் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்.

மேலும் இறுதிவரை களத்தில் நின்று போராடிய ரியான் பராக் 35 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே பந்துவீச்சில் சிமர்ஜித் சிங் 4 ஓவர்களுக்கு 26 ரன்கள் தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் சிமர்ஜித் சிங் முதல் மூன்று விக்கெட்டுகளாக ஜெய்ஸ்வால் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம்தான் குறிப்பிட்ட நேரத்தில் ரன் கட்டுப்பாடு சிஎஸ்கே கையில் இருந்தது. இதற்கு அடுத்து ராஜஸ்தான் அணி இழந்த இரண்டு விக்கெட்டுகளும் கடைசி ஓவரில் வந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனிக்கு எதிரா விளையாடறது நாங்க செஞ்ச பாக்கியம்ங்க.. யார்கிட்ட கேட்டாலும் ஒரு விஷயம் சொல்லுவாங்க – ஜோஸ் பட்லர் பேச்சு

பந்துவீச்சுகுப் பின் பேசிய சிமர்ஜித் சிங் கூறும் பொழுது “இங்கு வெயில் கொஞ்சம் கடுமையாக இருக்கிறது. ஆனால் இந்த நிலைமைகள் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் இன்று நாங்கள் அதிகம் முயற்சி செய்ய வேண்டி இருந்தது. ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் ஒட்டிக்கொண்டு வந்தது. நான் பேட்ஸ்மேன்கள் வழியில் பந்து வீசாமல், என்னுடைய வழியில் பந்துவீசினேன். மற்ற அணிகளின் திட்டம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறோம். ராஜஸ்தான் ஸ்கோர் சரிசமமானதுதான். ஆனால் நாங்கள் சரியாக பேட்டிங் செய்தால் இது மிக சுலபமானதாக மாறிவிடும்” என்று கூறி இருக்கிறார்.