எங்க கோட்டை ஹைதராபாத்துக்கு வாங்க.. பெரிய வானவேடிக்கை காத்திருக்கு – பாட் கம்மின்ஸ் சவால்

0
23
Cummins

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு மிக முக்கியமான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் ஹைதராபாத் அணி எதிர்கொண்டு, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோல்விக்குப் பிறகு முக்கியமான விஷயம் ஒன்றை ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பாட் கம்மின்ஸ் டாஸ் தோற்று விட்டார். இதனால் அந்த அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் விக்கெட்டுக்கு 37 பந்தில் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த போதும், நடுவில் வேகமாக விக்கெட்டுகளை இழந்து சிக்கிக்கொண்டது.

- Advertisement -

இதன்பிறகு இறுதி கட்டத்தில் வந்த கேப்டன் கம்மின்ஸ் ஆட்டம் இழக்காமல் 17 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் உடன் 35 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அந்த அணி ஓரளவுக்கு கௌரவமான ஸ்கோரை எட்டி 173 ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு எடுத்தது.

இதற்குப் பிறகு இலக்கை துரத்தும் பொழுது சூரியகுமார் யாதவ் 51 பந்தில் 102 ரன்கள் அதிரடியாக குவிக்க, ஹைதராபாத் அணியின் தோல்வியை யாராலும் தடுக்க முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய போதும், மேற்கொண்டு அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு மீதம் இருக்கும் மூன்று போட்டிகளையும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பின் பேசிய பாட் கம்மின்ஸ் “நாங்கள் கொஞ்சம் குறைவாக ரன்கள் எடுத்து விட்டோம். தாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது 10 முதல் 12 ஓவர்களுக்கு ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு இருந்தது. நாங்கள் சேசிங் செய்திருக்கலாம் என்று நினைத்தோம். இன்று இம்பேக்ட் பிளேயராக ஒரு பந்துவீச்சாளரை கொண்டு வந்திருந்தாலும் ஆட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்காது.

- Advertisement -

இதையும் படிங்க : சூர்யா பாய் செஞ்ச அந்த ஒரு விஷயம்.. என்னை அசச்சு பாத்திருச்சு.. அவர் தகுதியானவர் – திலக் வர்மா பேட்டி

இன்று நாங்கள் ஒரு நல்ல அணிக்கு எதிராக தோல்வி அடைந்தோம், குறிப்பாக சூரியக்குமாருக்கு எதிராக தோல்வியடைந்தோம். நாங்கள் அடுத்து எங்களின் மூன்று கடைசி போட்டிகளையும் எங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். அங்கு நிச்சயம் பெரிய வானவேடிக்கைகள் இருக்கும். ஆனால் இதை வைத்து நான் ஆடுகளத்தை முன்கூட்டியே எப்படி இருக்கும் என்று சொல்லியதாக நினைக்க வேண்டாம்” என்று மறைமுகமாக கூறியிருக்கிறார்.