வெந்த புண்ணுல வேல பாய்ச்சிட்டாங்களே.. சொந்த ஊருக்கு கிளம்பிய ஆஸி., கேப்டன்! மேலும் ஒருவர் தொடரிலிருந்து விலகல்!

0
4898

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் உட்பட இரண்டு பேர் ஆஸ்திரேலியாவிற்கு திரும்புகின்றனர். இதற்கான காரணங்கள் என்னவென்று அணி நிர்வாகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இவை இரண்டையும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையிலும் இருக்கிறது.

- Advertisement -

மீதம் இருக்கும் இரண்டு போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் மார்ச் 1ஆம் தேதி மற்றும் 9ம் தேதி முறையே துவங்குகிறது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதேபோல் ஆஸ்திரேலியா அணிலும் காயம் காரணமாக சில வீரர்கள் முதல் இரண்டு டெஸ்டில் விளையாடமுடியாமல் வெளியில் இருந்தனர். அதில் மிச்சல் ஸ்டார்க் முழுமையாக குணமடைந்து விட்டார். விளையாடுவதற்கு முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது.

- Advertisement -

மற்றொரு வேகப்பந்து பேச்சாளர் ஹேசல்வுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்னும் குணமடைவதற்கு கால அவகாசம் எடுக்கும் என்பதால் மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். விரைவில் நாடு திரும்ப உள்ளார் என்கிற தகவல்களும் வந்திருக்கின்றன.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் மீண்டும் இந்திய ஆஸ்திரேலிய அணியுடன் இணைவார் என்று தகவல்கள் கூறப்படுகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி துவக்கத்தில் தர்மசாலா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் வானிலை காரணமாக இந்தூர் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -